ரொக்கெட் குண்டுகள் வீசி உக்ரைன் விமான தளம் அழிப்பு: தீவிர தாக்குதலில் ரஷ்யா
ரஷ்ய இராணுவம் நடத்திய ரொக்கெட் தாக்குதலில் உக்ரைனின் விமான தளமொன்று அழிக்கப்பட்டது.
அதிபர் விளாடிமிர் புடின் உத்தரவின்படி, மூன்றாவது வாரமாக உக்ரைனில் தீவிர தாக்குதல் நடத்திவரும் ரஷ்ய இராணுவ படையினர், இன்று காலை தலைநகர் கீவில் வான்வழி தாக்கத்தால் நடத்தியது.
அப்போது ரஷ்யாவின் ரொக்கெட் தாக்குதல்களில் கீவ் பிராந்தியத்தில் உள்ள வாசில்கிவ் (Vasylkiv) நகருக்கு அருகிலுள்ள உக்ரேனிய விமானத் தளம் அழிக்கப்பட்டதாக, நகர மேயர் நடாலியா பாலசினோவிச் (Natalia Balasynovych) தெரிவித்துள்ளார்.
மேலும், ரஷ்யாவின் ரொக்கெட்டுகள் உக்ரைனின் வெடிமருந்து கிடங்கையும் தாக்கியதாக வாசில்கிவ் மேயர் தெரிவித்தார்.
அதேபோல், மரியுபோல் நகரத்தில் 80-க்கும் மேற்பட்ட மக்கள் தங்கியுள்ள ஒரு மசூதியில் ஷெல் தாக்குதல் நடத்தியுள்ளது ரஷ்யா.
ரஷ்யா அதன் தாக்குதலை தீவிரப்படுத்துவதாக பிரித்தானிய உளவுத்துறை எச்சரித்ததை அடுத்து இந்த செய்திகள் வெளிவந்துள்ளன.