கையெறி குண்டை வெடிக்க செய்த ரஷ்ய பள்ளி சிறுவன்: இறுதியில் நேர்ந்த பரிதாபம்
ரஷ்யாவில் பள்ளி மாணவன் ஒருவன் வகுப்பறையில் கையெறி குண்டுகளை வெடிக்க செய்ததன் மூலம் கைகளை இழந்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வெடித்த கையெறி குண்டு
ரஷ்யாவின் பீட்டர்ஸ்பர்க்கில் உள்ள க்ராஸ்னோசெல்ஸ்கி மாவட்டத்தில் வியாழக்கிழமை பள்ளி சிறுவன் ஒருவன் வகுப்பறையில் கையெறி குண்டுகளை வெடிக்க செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
தனது வகுப்பறைக்குள் கையெறி குண்டுகளை எடுத்துச் சென்ற சிறுவன் அதனை தனது கைகளிலேயே வெடிக்கச் செய்தான்.
Getty Images
இதில் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்த சிறுவன், பலத்த காயங்களுடன் மருத்தவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிறுவன் அவனது கைகளை இழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வெடிகுண்டு விபத்தில் வகுப்பறையில் இருந்த மற்ற மாணவர்கள் யாரும் காயமடையவில்லை, இதற்கிடையில் சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக உள்ளூர் ஊடகங்களில் வெளியான செய்திகளில் சிறுவனின் பெயர், வயது மற்றும் பள்ளி ஆகியவை மறைக்கப்பட்டுள்ளன.
Getty Images
ஏர்சாஃப்ட் கையெறி குண்டுகள்
ஏர்சாஃப்ட் கையெறி குண்டுகளில் பிளாஸ்டிக் பிபி துப்பாக்கித் துகள்கள் உள்ளன மற்றும் சாதாரண கையெறி வெடிப்பது போலவே வெடிக்க கூடியது.
இந்த குண்டுகள் இராணுவ பயிற்சி வசதிகளில் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.