இறப்பதற்கு 37 வழிகள்..! பலவகை ஒவ்வாமைகளால் அவதிப்படும் தென்கொரிய இளம் பெண்
தென் கொரியாவில் இளம்பெண் ஒருவர் திராட்சை பழம் முதல் பலவகையான ஓவ்வாமைகளால் பாதிப்புகளால் அவதிப்பட்டு வருகிறார்.
இறப்பதற்கு 37 வழிகள்
தென் கொரியா தலைநகர் ஜியோல் பகுதியை சேர்ந்த ஜோன்னே பேன் என்ற 21 வயதான பெண் டிக்டாக் மற்றும் இன்ஸ்டாகிராமில் தனக்கு பல விதமான ஒவ்வாமைகள் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
அதில், இறப்பதற்கு 37 புதிய வழிகள் என்ற தலைப்பில், தனக்கு பல உணவுகளில் ஒவ்வாமை இருப்பதாக தெரிவித்து ஒரு பட்டியலை பகிர்ந்துள்ளார்.
இந்த பட்டியலில் திராட்சை பழம் முதல் சில பழங்களால் தனக்கு ஒவ்வாமை இருப்பதாக கூறியுள்ளார்.
இந்த பழங்களை சாப்பிட்ட 10 நிமிடங்களுக்கு தான் தோல் அலர்ஜியால் பாதிக்கப்பட்டு விடுவதாகவும், உடலில் அரிப்பு மற்றும் அதிக வெப்பம் போன்ற அறிகுறிகள் ஏற்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
தனது பட்டியலின் தலைப்பில் 37 என்று எண்ணை பயன்படுத்தினாலும், அதை விட தனக்கு ஒவ்வாமைகள் அதிகமாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், அந்த வீடியோ 5 கோடிக்கும் அதிகமான பார்வையாளர்களை பெற்றுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |