சேலம் மஞ்சளை துபாய் வரையில் வணிகம் செய்யும் இளைஞர்; கோடி கணக்கில் வருவாய் ஈட்டியது எப்படி?
இந்தியாவின் தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்தவர் இன்று விவசாயம் செய்து துபாய் வரையில் வணிகம் செய்து வருகிறார்.
யார் இந்த இளைஞர்?
இந்தியாவின் தமிழ்நாட்டில் சேலத்தில் பிறந்து வளர்ந்து, அமெரிக்காவில் பட்டப்படிப்பை முடிப்பதற்காக சென்றுள்ளார்.
பட்டப்படிப்பு முடிந்தவுடன், அமெரிக்காவில் உள்ள ஒரு புகழ்பெற்ற வங்கியில் வணிக ஆய்வாளராக பணிப்புரிந்து நல்ல நிலைமையில் இருந்துள்ளார்.
இவர் இந்த வாழ்க்கையை தனது பெற்றோர்களுக்காக 4 வருடங்கள் வாழ்ந்துள்ளார். பின்னர் தான் ஒரு குறை இருப்பதை உணர்ந்துக்கொண்டு இந்தியாவிற்கு திரும்பியுள்ளார்.
சிறு வயதில் இருந்து சொந்தமாக வியாபாரம் செய்ய வேண்டும் என்ற ஆசை இருந்ததன் காரணமாக, அவர் ஒரு தொழிலைத் தொடங்க நினைத்துள்ளார்.
விவசாயப் பொருட்களை அடிப்படையாகக் கொண்ட ஒரு முயற்சியைத் தேர்ந்தெடுத்து ஆரம்பித்துள்ளார் எனலாம்.
அமெரிக்காவில் படித்து இந்தியாவில் விவசாயம்
சேலம் தமிழ்நாட்டின் ஒரு சிறிய நகரமாகும். அவருடைய வணிகத்திற்கான சரியான மூலப்பொருளுக்கான தேடலின் போது சொந்த ஊரில் பல ஆண்டுகளாக பயிரிடப்பட்டு வரும் சேலம் மஞ்சள் குறித்து ஆராய்ந்துள்ளார்.
உள்ளூர் விவசாயிகளிடமிருந்து நேரடியாக கரிம மஞ்சளை அதன் தூய்மையான வடிவத்தில் பெற்றெடுத்து இவர்களுடைய தயாரிப்பில் பயன்படுத்துகின்றனர்.
டிசம்பர் 2019 இல் தொடங்கப்பட்ட The Divine Foods அதன் தயாரிப்புகளை இந்தியாவிலும் பல நாடுகளிலும் விற்பனை செய்து வருகிறது.
The Divine Foods
சேலம் மஞ்சளில் சுமார் 2.5 சதவீதம் முதல் 3 சதவீதம் வரை குர்குமின் இருப்பதாக நிறுவனத்தின் தலைவரான கிரு ஓர் நேர்காணலில் கூறியுள்ளார்.
குர்குமின் என்பது மஞ்சளில் உள்ள உயிர்வேதியியல் கலவையாகும், இது புற்றுநோய் முதல் அனைத்து வகையான நோய்களுக்கும் தீர்வாக இருக்கிறது.
மஞ்சளை அடிப்படையாகக் கொண்டு செய்யப்படும் பொருட்கள் அனைத்தும் சந்தையில் அதிகமாக காணப்படுகிறது.
இருப்பினும், மஞ்சள் தூள் போன்ற பொருட்களின் வணிகமயமாக்கல் சந்தையில் சிறந்த தரத்தை கண்டுபிடிப்பதில் நுகர்வோருக்கு கடினமாக இருக்கிறது.
இன்று வரையில் நல்ல தயாரிப்பு நிறுவனத்திலும் கலப்பட மஞ்சள் பொடியானது விற்பனை செய்யப்படுகிறது. அதை மாற்றும் முகமாகவே இவர் இதை ஆரம்பித்துள்ளார்.
இந்த நிறுவனத்தில் இருந்து பருத்தி பால் முதல் பல மஞ்சள் வரை பல பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன.
இதில் பிரபல நடிகையுமான நயன்தாரா, அவரது கணவர் இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் சேர்ந்து இந்நிறுவனத்திற்கு முதலீடு செய்துள்ளனர்.
முதலீடு செய்த நடிகை நயன்தாரா - விக்கி
தனது நடிப்பு திறமையால் ரசிகர்களை கவர்ந்து வரும் நயன்தாராவும், பிரபல திரைப்பட தயாரிப்பாளரான விக்னேஷ் சிவனும் தற்போது தொழில்முனைவோராகவும், முதலீட்டாளர்களாகவும் பெயர் பெற்று வருகின்றனர்.
இதன் விளைவாக இவர்கள் இந்த நிறுவனத்திலும் முதலீடு செய்துள்ளார்கள்.
வருவாய் எவ்வளவு?
சொந்த முயற்சியில் ஆரம்பிக்கப்பட்டு தற்போது பல கோடி வருவாய் ஈட்டும் தொழிலாக வளர்ந்துள்ளது.
நான்கு ஆண்டுகளுக்கு முன்பு மஞ்சள் தயாரிப்புகளை வழங்குவதன் மூலம் தொடங்கிய பயணம், இப்போது பல்வகைப்பட்ட உணவு வகைகளை வழங்கும் அளவிற்கு மாறியுள்ளது எனலாம்.
உலகளவில் விற்பனையாகும் சேலம் தயாரிப்புகள்
The Divine Foods நிறுவனத்தில் இருந்து தயாரிக்கப்படுகின்ற பொருட்கள் அனைத்தும் உலக சந்தைகளிலும் விற்பனையாகிறது.
அமேசான் போன்ற தளங்கள் மூலம், அவர்கள் அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் சிங்கப்பூர் போன்ற பல இடங்களில் விற்பனை செய்யப்படுகிறது.
25,000 க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களுடன், இது இந்தியாவின் வேகமாக வளரும் D2C உணவு தொழில்நுட்ப பிராண்டாக உள்ளது.
மேலும் இந்நிறுவனமானது குறுகிய காலத்தில் US FDA அங்கீகாரத்தை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |