உக்ரைன்-ரஷ்யா போரை தீர்க்க சவுதி அரேபியா முடிவு; மத்தியஸ்தம் செய்ய இந்தியாவுக்கு அழைப்பு
உக்ரைன்-ரஷ்யா இடையேயான போரை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க சவுதி அரேபியா முடிவு செய்துள்ளது.
உக்ரைன் விவகாரம் குறித்து விவாதிக்க சவுதி அரேபியா தயாராக உள்ளது. அதற்காக ஆகஸ்ட் 5 மற்றும் 6-ம் திகதிகளில் ஜெட்டாவில் நடைபெறும் பேச்சுவார்த்தைக்கு இந்தோனேஷியா, எகிப்து, மெக்சிகோ, சிலி, ஜாம்பியா உள்ளிட்ட 30 நாடுகளின் மூத்த அதிகாரிகளையும், பிரேசில் உள்ளிட்ட வளரும் நாடுகளின் மூத்த அதிகாரிகளையும் சவுதி அரேபியா அழைத்துள்ளது.
பேச்சுவார்த்தைக்கு மத்தியஸ்தம் செய்ய இந்தியாவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
Getty Images
அழைக்கப்பட்ட நாடுகளில் எத்தனை நாடுகள் பங்கேற்கும் என்பது தெளிவாகத் தெரியவில்லை. ஜூன் மாதம் கோபன்ஹேகனில் நடந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்ற நாடுகள் பங்கேற்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரித்தானியா, தென்னாப்பிரிக்கா, போலந்து, ஐரோப்பிய யூனியன் ஆகிய நாடுகள் பேச்சுவார்த்தையில் பங்கேற்பதை உறுதி செய்துள்ளன.
geopoliticalmonitor
இதற்கிடையில், ரஷ்யாவின் பிராந்திய உரிமைகோரல்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டால் மட்டுமே அமைதி பேச்சுவார்த்தை சாத்தியமாகும் என்ற நிலைப்பாட்டில் உள்ளது.
மாஸ்கோ தனது படைகளை வாபஸ் பெற்ற பின்னரே ரஷ்யாவுடனான பேச்சுவார்த்தை சாத்தியமாகும் என்றும் உக்ரைன் கூறுகிறது. உக்ரைனின் ஆறில் ஒரு பகுதியை ஆக்கிரமித்துள்ளதாக கிரெம்ளின் கூறுகிறது. உக்ரைன் தனது எதிர் தாக்குதலை முடுக்கிவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
Ukraine Russia Peace Summit, Saudi Arabia Host Ukraine Russia Peace talks, Ukraine Russia War, Russia Ukraine War