இந்தியாவுடன் போர் வெடித்தால் சவுதி களமிறங்குமா? பாகிஸ்தான் விளக்கம்
இந்தியா தனது அண்டை நாடு மீது போர் தொடுத்தால், சவுதி அரேபியா பாகிஸ்தானை பாதுகாக்கும் என பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிஃப் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் ஆதரவாக
இந்த வாரம் பாகிஸ்தானும் சவுதி அரேபியாவும் இருதரப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தம் ஒன்றை முன்னெடுத்துள்ள நிலையில், கவாஜா ஆசிஃப் தற்போது விளக்கமளித்துள்ளார்.
பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் தொடுக்கும் என்றால், கண்டிப்பாக பாகிஸ்தான் ஆதரவாக சவுதி அரேபியா களமிறங்கும் என்றார். இருப்பினும், சவுதி அரேபியாவுடனான ஒப்பந்தம் தாக்குதல் ஏற்பாட்டை விட தற்காப்பு ஒப்பந்தம் மட்டுமே என்றும் பாகிஸ்தான் அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.
ஆனால் இரு நாடுகளில் ஒன்று அச்சுறுத்தலுக்கு உள்ளானால், கண்டிப்பாக ஒப்பந்தத்தின் அடிப்படையில் செயல்பட வேண்டிய நிலை வரும் என்றார். மேலும், பாகிஸ்தானின் அணு ஆயுதங்களை இனி சவுதி அரேபியாவும் பயன்படுத்தலாம் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இரு நாடுகளுக்கும்
அணு ஆயுதங்கள் இந்தியாவிற்கு எதிராக மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் என்று கோட்பாடு குறிப்பிடுகிறது என்பதையும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், தங்கள் அணு ஆயுதங்கள் எப்போதும் ஆய்வுக்கு உட்படுத்தக் கூடியவை என்றும், விதி மீறல்களை பாகிஸ்தான் அனுமதிப்பதில்லை என்றார்.
இந்த ஒப்பந்தத்தின் ஒரு முக்கிய பிரிவு என்பது, எந்தவொரு நாட்டிற்கும் எதிரான எந்தவொரு ஆக்கிரமிப்பும் இரு நாடுகளுக்கும் எதிரான ஆக்கிரமிப்பாகக் கருதப்படும் என்பதே.
இந்த ஒப்பந்தம் தொடர்பில் பதிலளித்துள்ள இந்திய தரப்பு, இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால ஏற்பாட்டை முறைப்படுத்துகிறது என்றும் அதன் தாக்கங்கள் பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |