புர்ஜ் கலீஃபா இனி உலகின் உயரமான கட்டிடம் இல்லை - 1 கிமீ உயர கட்டிடம் கட்டும் நாடு
புர்ஜ் கலீஃபாவை விட உயரமான கட்டிடத்தை அரபு நாடு ஒன்று கட்டி வருகிறது.
புர்ஜ் கலீஃபா
உலகின் உயர்ந்த கட்டிடமாக துபாயில் உள்ள 828 மீட்டர் (2,717 அடி) உயரம் கொண்ட புர்ஜ் கலீஃபா(Burj Khalifa) கருதப்படுகிறது.
2004 ஆம் ஆண்டு கட்ட தொடங்கப்பட்ட இந்த கட்டிடம், 163 மாடிகளுடன் 2010 ஆம் ஆண்டு திறக்கப்பட்டது.
துபாயின் முக்கிய அடையாளமாக மாறியுள்ள இந்த கட்டிடத்தில், குடியிருப்புகள், அலுவலகங்கள், ஹோட்டல்கள் என பலவும் உள்ளன.
[BI4FT2
இந்நிலையில், உலகின் உயரமான கட்டிடம் என்ற பெருமையை புர்ஜ் கலீஃபா இழக்க உள்ளது. மற்றொரு அரபு நாடான சவுதி அரேபியா, புர்ஜ் கலீஃபாவை விட உயரமான கட்டிடம் ஒன்றை கட்டி வருகிறது.
ஜெட்டா டவர்
2013 ஆம் ஆண்டு இதன் கட்டுமான பணிகள் தொடங்கப்பட்ட நிலையில், பல்வேறு காரணங்களால், 2018 ஆம் ஆண்டு இடைநிறுத்தப்பட்டது. தற்போது மீண்டும் இதன் கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.
ஜெட்டா நகரில், 26 பில்லியன் டொலர் பட்ஜெட்டில், 660 ஏக்கரில், 156 தளங்களுடன், 3,307 அடி உயரத்திற்கு இந்த ஜெட்டா டவர் (Jeddah Tower) கட்டிடம் உருவாக்கப்பட்டு வருகிறது. தற்போது, 63 தளங்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
இதில், குடியிருப்புகள், அலுவலகங்கள் மற்றும் சில்லறை விற்பனை கடைகள் ஆகியவை அமைக்கப்பட உள்ளது.
புர்ஜ் கலீஃபாவை வடிவமைத்த அமெரிக்க கட்டிடக் கலைஞர் அட்ரியன் ஸ்மித், இதனையும் வடிவமைக்கிறார்.
இதன் கட்டுமான பணிகள், 2030 ஆம் ஆண்டு முடிவடைந்து அதன் பின்னர் திறக்கப்படும் என கூறப்படுகிறது. இது புர்ஜ் கலீஃபாவை விட 180 மீ (591 அடி) உயரமாக இருக்கும்.
இந்த கட்டிடம் திறக்கப்பட்டால், உலகின் உயரமான கட்டிடமாக மாறுவதோடு, உலகின் முதல் 1கிலோ மீட்டர் உயரம் உள்ள கட்டிடம் என்ற பெருமையை பெரும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |