சவுதி அரேபியாவின் F15 SA போர் விமானம் விபத்து: குழுவினர் அனைவரும் உயிரிழப்பு
சவுதி அரேபியாவின் போர் விமானம் விபத்துக்குள்ளானதில் இருந்து குழுவினர் அனைவரும் உயிரிழந்து இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
விபத்துக்குள்ளான போர் விமானம்
சவுதி அரேபியாவின் F-15 SA ரக போர் விமானம் காமிஸ் முஷைத் பகுதியில் பயிற்சியில் ஈடுபட்டு இருந்த போது விபத்துக்குள்ளானது.
இதில் போர் விமானத்தில் இருந்த அனைவரும் உயிரிழந்துவிட்டதாக புதன்கிழமை சவுதி செய்தி நிறுவனம், பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் பிரிகேடியர் ஜெனரல் துர்கி அல்- மாலிகியை சுட்டிக் காட்டி தெரிவித்துள்ளது.
Twitter
சவுதி அரேபியா விமானப்படையின் போர் விமானம் கிங் காலித் விமான பயிற்சி பகுதியில் விபத்துக்குள்ளாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசாரணை
இந்நிலையில் போர் விமான விபத்து குறித்து விசாரணை தொடங்கி இருப்பதாக விமானப்படை தெரிவித்துள்ளது.
இதற்கிடையில் உயிரிழந்தவர்களுக்கு கடவுள் கருணை காட்டட்டும், அவர்களது குடும்பத்திற்கு ஆறுதல் வழங்க எல்லாம் வல்ல இறைவனை கேட்டுக்கொள்கிறேன் என பிரிகேடியர் ஜெனரல் அல்-மால்கி தெரிவித்துள்ளார்.
iStock
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |