ஸ்கூபா டைவர்ஸ் படம் பிடித்த அந்த ராட்சத துருப்புமீன்... அதன் பின்னணியில் மரண பயத்தை ஏற்படுத்தும் தகவல்
தைவானில் ஸ்கூபா டைவர்ஸ் குழு ஒன்று மிக மிக அரிதான நிகழ்வாக, ராட்சத துருப்பு மீன் கூட்டம் ஒன்றை காண நேர்ந்த நிலையில், அதன் பின்னணியில் கூறப்படும் தகவல் அங்குள்ள மக்களுக்கு மரண பயத்தை ஏற்படுத்தியுள்ளது.
அந்த பகுதியில் நிலநடுக்கம் உறுதி
கடலின் மிக மிக ஆழத்தில் காணப்படும் அந்த ராட்சத துருப்புமீன், மக்களின் பார்வைக்கு தென்படுகிறது என்றால், அந்த பகுதியில் நிலநடுக்கம் உறுதி என்றே நம்பப்படுகிறது.
தற்போது தைபேயில் உள்ள ரூயிஃபாங் மாவட்டத்திற்கு அருகில் அந்த துருப்புமீன் தென்பட்டுள்ளது. தொடர்புடைய மீனுக்கு உடல் முழுவதும் துவாரங்கள் காணப்படுவதாகவும், ஆழ்கடலில் சுறாக்களின் தாக்குதலில் இருந்து தப்பும் போது ஏற்பட்டிருக்கலாம் எனவும் கூறுகின்றனர்.
உள்ளூர் மக்களால் நிலநடுக்க மீன் என அழைக்கப்படும் அந்த துருப்புமீனை ஸ்கூபா டைவர் ஒருவர் நெருங்கி தொட்டுவிட, அதன் உடல் நடுங்கியதாக கூறுகின்றனர். சுமார் 8 அடி நீளம் கொண்ட அந்த ராட்சத மீன், நிலநடுக்கத்திற்கு முன்னர் ஆழ்கடலில் இருந்து வெளிவரும் என்றே நம்பப்படுகிறது.
@viralpress
இதுவரை உறுதி செய்யப்படவில்லை
சுமார் 26 அடி நீளம் வரையில் இந்த துருப்புமீன் காணப்படுவதுண்டு என கூறும் ஆய்வாளர்கள், பொதுவாக துருப்புமீன் காணப்பட்டால், இயற்கை பேரழிவு உறுதி என்றே உள்ளூர் மக்கள் நம்புவதாக தெரிவித்துள்ளனர்.
சுனாமி அல்லது நிலநடுக்கத்திற்கு முன்னர் துர்ப்புமீன்கள் கடலின் ஆழத்தில் இருந்து வெளிவரும் என கூறுகின்றனர். ஆனால் இந்த கூற்று உண்மையா என்பது குறித்து இதுவரை உறுதி செய்யப்படவில்லை.
@viralpress
பொதுவாக ராட்சத துருப்பு மீன்கள் 650 முதல் 3,300 அடி ஆழத்தில் காணப்படும் ஒருவகை அரிதான மீன் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |