3-வது முறையாக செந்தில் பாலாஜிக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு
அமைச்சர் செந்தில் பலாஜிக்கு நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடையும் நிலையில் 3 ஆவது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
புழல் சிறையில் செந்தில் பாலாஜி
இந்திய மாநிலம் தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த மாதம் 14ம் திகதி பண மோசடி வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்ப்பட்டார். அப்போது திடீரென நெஞ்சுவலி ஏற்பட ஓமந்தூரார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
அங்கு அவருக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. பின்னர், அவர் காவேரி மருத்துவமனையில் இருந்து புழல் சிறைக்கு மாற்றம் செய்யப்பட்டார்.
நீதிமன்ற காவல் நீட்டிப்பு
அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த போது, அவருக்கு ஜூன் 28 ஆம் திகதி வரை 14 நாள்கள் நீதிமன்ற காவல் அளிக்கப்பட்டது.
இதனையடுத்து, நீதிமன்ற காவல் முடிந்த பின்பு அவர் காணொளி காட்சி மூலம் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பு ஆஜரானார். அப்போது அவருக்கு ஜூலை 12 ஆம் திகதி வரை நீதிமன்ற காவல் நீட்டிப்பு செய்யப்பட்டது.
பின்பு, அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு கடந்த 12 ஆம் திகதியுடன் நிறைவடைந்த நிலையில் இரண்டாவது முறையாக ஜூலை 26 ஆம் திகதி வரை நீதிமன்ற காவல் நீட்டிப்பு செய்யப்பட்டது.
இந்நிலையில், இன்றுடன் முடிவடைந்த நீதிமன்ற காவல் மூன்றாவது முறையாக ஆகஸ்ட் 08 ஆம் திகதி வரை நீட்டிக்கப்பட்டு சென்னை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
புழல் சிறையில் இருந்து காணொளிக் காட்சி வாயிலாக அமைச்சர் செந்தில் பாலாஜி ஆஜர்படுத்தப்பட்ட பொது சென்னை அமர்வு நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |