சாலையோரத்தில் சடலங்கள்... துயரத்தில் ஹாலோவீன் கொண்டாட்டம்: அதிகரிக்கும் பலி எண்ணிக்கை
கொரோனா ஊரடங்குகளுக்கு பின்னர் மாஸ்க் கட்டுப்பாடுகள் இல்லாத முதல் ஹாலோவீன் கொண்டாட்டம்
கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 120 பேர்கள் மரணமடைந்துள்ளதாக அதிர்ச்சி தகவல்
தென் கொரியாவில் நடந்த ஹாலோவீன் கொண்டாட்டங்களுக்கு நடுவே ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 120 பேர்கள் மரணமடைந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனா ஊரடங்குகளுக்கு பின்னர் மாஸ்க் கட்டுப்பாடுகள் இல்லாத முதல் கொண்டாட்டம் இதுவென்பதால், சுமார் 100,000 மக்கள் வரையில் சம்பவம் நடந்த பகுதியில் திரண்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் திடீரென்று ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி டசின் கணக்கான மக்கள் சுருண்டு விழுந்ததாகவும், இதில் பலருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி 120 பேர்கள் இறந்துள்ளதாக முதற்கட்ட தகவவல் வெளியாகியுள்ளது. அதிகாரிகள் தரப்பும் குறித்த தகவலை உறுதி செய்துள்ளனர். மேலும் பலர் ஆபத்தான நிலையில் சிகிச்சையில் இருப்பதாகவும், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் எனவும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே சம்பவயிடத்தில் இருந்து அவசர உதவிக் கேட்டு 81 தொலைபேசி அழைப்புகள் விடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. சுமார் 150 பேர்கள் காயம்பட்டதாகவும், சாலையோரத்தில் அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, சம்பவப்பகுதிக்கு அவசர மருத்துவ உதவிக்குழுக்களை அனுப்பி வைக்க ஜனாதிபதி Yoon Suk-yeol உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், மருத்துவமனைகளில் அவசர படுக்கை வசதிகளை ஏற்பாடு செய்யவும் ஜனாதிபதி அலுவலகம் உத்தரவுகளை பிறப்பித்துள்ளதாக கூறப்படுகிறது.