இறப்புக்கு பின்னும் உணவளிக்கும் கேப்டன் விஜயகாந்த்: வீடியோ
தேமுதிக தலைவரான கேப்டன் விஜயகாந்த் அவர்களின் இறுதிச் சடங்கில் பங்கேற்கும் தொண்டர்களுக்கு உணவானது தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.
மரணத்திற்கு பிறகும் உணவு அளிக்கும் கேப்டன் விஜயகாந்த்
தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் நேற்று காலை உயிரிழந்ததை தொடர்ந்து அவரது உடல், பொதுமக்கள், திரைத்துறையினர் மற்றும் அரசியல் தலைவர்கள் அஞ்சலி செலுத்துவதற்காக சென்னை தீவுத்திடலில் வைக்கப்பட்டு இருந்தது.
தற்போது சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படுவதற்காக கேப்டன் அவர்களின் பூத உடல் தீவுத்திடலில் இருந்து கொண்டு வரப்பட்டு கொண்டு இருக்கிறது.
இந்நிலையில் தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக காத்து இருக்கும் அனைத்து மக்களுக்கும் உணவானது தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.
Serving food to the fans and public who came to send off #Puratchikalaignar #Vijayakanth sir. #SilambarasanTR pic.twitter.com/dVTkNgZ1j6
— Hariharan Gajendran (@hariharannaidu) December 29, 2023
தன்னை பார்க்க வந்த எவரும் உண்ணாமல் செல்ல கூடாது, அதே சமயம் ஹீரோவுக்கு பரிமாறப்படும் அதே உணவு கடைக்கோடியில் பணிப்புரியும் தொழிலாளிக்கும் பரிமாறப்பட வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தார்.
இல்லாதவர்களுக்கு இயன்றதை செய்வோம் என்று வாழ்ந்த கேப்டன் விஜயகாந்த், தான் இறந்த பிறகும் மக்களுக்கு இல்லை இல்லை என்று உணவளித்து வருகிறார் என தொண்டர்கள் உணர்ச்சி பொங்க தெரிவித்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |