காலிஸ்தான் ஆதரவாளர்கள் குறித்த தகவல்கள்..RAW அமைப்பிற்கு வழங்கும் ரஷ்யா? வெளியான தகவல்
இந்திய உளவு அமைப்பிற்கு காலிஸ்தான் ஆதரவாளர்கள் குறித்த தகவல்களை ரஷ்யா வழங்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
உளவு தகவல்கள்
இந்தியாவால் தடை செய்யப்பட்ட அமைப்பாக சீக்கியர்களுக்கான நீதி அமைப்பு உள்ளது. இதன் இணை நிறுவனர் குருபத்வந்த் சிங் பன்னுள் உள்ளார்.
இவர் மீதான கொலை முயற்சியில் இந்தியாவை தொடர்புப்படுத்தி சர்ச்சை எழுந்தது. மேலும் இவர் இந்திய விமானங்களுக்கு அடிக்கடி வெடிகுண்டு மிரட்டல் விடுத்தும் வருகிறார்.
இந்த நிலையில், குருபத்வந்த் சிங் பன்னுள் தற்போது ரஷ்யா மீது உளவு தகவல்கள் குறித்து குற்றம்சாட்டியுள்ளார்.
ரஷ்யா மீது குற்றச்சாட்டு
இந்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், உளவு அமைப்பான RAW-வுடன் தொடர்பில் உள்ள ரஷ்ய அமைப்புகள், காலிஸ்தான் ஆதரவாளர்கள் குறித்த தகவல்களை வழங்குவதாக குருபத்வந்த் கூறியுள்ளார்.
இதன்மூலம் காலிஸ்தானுக்கு எதிராக ரஷ்யா செயல்படுவதாக அவர் எச்சரித்துள்ளார். மேலும் ரஷ்ய ஊடகம் காலிஸ்தான் குறித்த தப்பெண்ணத்தை பரப்புவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதற்கிடையில், நியூயார்க்கில் உள்ள ரஷ்ய தூதரகம் முன் எஸ்.எப்.ஐ உறுப்பினர்கள் போராட்டத்தில் நேற்று முன் தினம் ஈடுபட்டனர்.
அத்துடன் அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளில் உள்ள ரஷ்ய தூதரகம் முன்னும் ஆர்ப்பாட்டம் நடத்தவும் அமைப்பினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |