ரோந்து சென்ற ராணுவத்தினர் மீது துப்பாக்கிச்சூடு! 7 பேர் கொல்லப்பட்டதற்கு பிரதமர் கண்டனம்
பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் 7 பேர் கொல்லப்பட்டதற்கு பிரதமர் ஷெபாஸ் ஷெரிஃப் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தாக்குதல்
லக்கி மார்வாட் மாவட்டத்தின் Kachi Qamar நோக்கி ராணுவ வீரர்கள் ரோந்து சென்று கொண்டிருந்தனர்.
பாதுகாப்பு படையினரின் இந்த கான்வாய் மீது துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தப்பட்டது.
முதலில் ஒரு மேம்பட்ட வெடிகுண்டு சாதனம் வெடிக்க வைக்கப்பட்டது.
பிரதமர் கண்டனம்
இதில் வாகனத்தில் சென்ற கேப்டன் உட்பட 7 ராணுவ வீரர்கள் சம்பவ இடத்திலேயே பலியாகினர். இந்த தாக்குதலுக்கு எந்த பயங்கரவாத அமைப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லை.

200 கோடி தெற்காசிய மக்களின் தலைவிதியை வடிவமைக்க..பிரதமர் நரேந்திர மோடிக்கு பாகிஸ்தான் தலைவர்கள் வாழ்த்து
பிரதமர் ஷெபாஸ் ஷெரிஃப் இந்த தாக்குதல் சம்பவத்திற்கு கடும் கண்டனம் கண்டனத்துடன், ராணுவ வீரர்களின் வீரமரணம் அடைந்ததற்கு ஆழ்ந்த வருத்தம் தெரிவித்துள்ளார்.
மேலும் தனது இரங்கல் பதிவில், ''நமது துணிச்சலான வீரர்கள் மற்றும் குடிமக்களின் தியாகம் நம் நாட்டில் இருந்து பயங்கரவாதத்தை இடைவிடாமல் ஒழிப்பதன் மூலம் நாம் திருப்பிச் செலுத்த வேண்டிய கடனாகும்'' எனவும் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |