கொலை செய்யவே இம்ரான் கானை சுட்டேன்! தாக்குதல் நடத்திய நபர்
இம்ரான் கான் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட சம்பவம் பாகிஸ்தானில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
இம்ரான் கானின் காலில் குண்டு பாய்ந்ததால் அவரால் 3 வாரங்களுக்கு நடக்க முடியாது என மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை சுட்ட நபர் பொலிஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் வாஜிராபாத்தில் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தலைமையிலான பிரம்மாண்ட பேரணி நடைபெற்றது.
அப்போது திடீர் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இதில் இம்ரான் கானின் காலில் குண்டு பாய்ந்தது. தாக்குதல் நடத்தியவர்களில் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. மற்றோரு நபர் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
AP/PTI
இந்த நிலையில் கைது செய்யப்பட்ட நபர் பஞ்சாபி விவசாய பழங்குடியினத்தைச் சேர்ந்த நவீத் என்பது தெரிய வந்துள்ளது. நவீத் வீடியோ ஒன்றில், 'இம்ரான் கான் மக்களை தவறாக வழி நடத்துகிறார், அவரை கொல்ல தான் வந்தேன்' என்று கூறியுள்ளார்.
(Image credit: NDTV, Indian Express)
இதற்கிடையில் பயங்கரவாத அமைப்பு தான் இந்த தாக்குதலை நடத்தியதாக இம்ரான் கானின் உதவியாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
Dawnnews