மனைவிகளுக்கு போதைமருந்து கொடுத்து 10 ஆண்டுகளாக 5 நண்பர்கள் செய்த கொடூர செயல்! 23 ஆண்டுகள் வரை சிறை தணடனை
குறைந்தது ஏழு வருடங்களாக ஒரு பெண் சுயநினைவின்றி பலமுறை கணவனின் நண்பர்களால் துஷ்பிரயோகம் செய்யப்பட்டார்.
10 ஆண்டுகள் கடந்து, எதேச்சையாக தனது கணவனின் போனில் சில சேட்டிங் தளங்களை திறந்து பார்த்தபோது தனக்கு நடந்த கொடுமைகளை கண்டறிந்துள்ளார்.
சிங்கப்பூரில் நான்கு நண்பர்கள், தங்கள் மனைவிகளுக்கு போதை மருந்து கொடுத்து, ஒருவரை ஒருவர் மாறிமாறி பாலியல் பலாத்காரம் செய்வதைப் பார்த்து ரசித்த வழக்கில், 23 ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
J,K, M மற்றும் L என குறிப்பிடப்படும் அந்த நான்கு பேரும் தங்கள் மனைவிகளை துஷ்பிரயோகம் செய்ய சதி செய்ததாக இரண்டு குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டனர்.
இதில், J-வின் மனைவி அவரது கணவரால் போதை மருந்து கொடுக்கப்பட்டு மற்றும் கண்கள் கட்டப்பட்டு மயக்கமடைந்த நிலையில், குறைந்தது ஏழு வருடங்களாக வெவ்வேறு ஆண்களால் பலமுறை பலாத்காரம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
அப்பெண், எதேச்சையாக தனது கணவனின் போனில் சில சேட்டிங் தளங்களை திறந்து பார்த்தபோது, தனது நிர்வாண புகைப்படங்கள் அதில் பகிரப்பட்டிருப்பதை கண்ட பிறகு தனக்கு நடந்த கொடுமைகளை கண்டறிந்துள்ளார்.
J என்பவரால் 2010-ஆம் ஆண்டு முதல் தொடங்கி வழக்கமாலை நடந்து வரும் இந்த கொடுமைகள், 2020-ல் அவரது மனைவி புகார் அளித்த பிறகு வெட்டவெளிச்சமானது.
இந்த நால்வர் இல்லாமல், N என்று குறிப்பிடப்படும் கல்யாணம் ஆகாத மற்றோருவர் இந்த நான்கு நண்பர்களுக்கு கூட்டாளியாவார்.
உணவு விநியோகம் செய்பவராக N, 2017 மற்றும் 2018-க்கு இடையில் ஜேவின் மனைவியை பாலியல் பலாத்காரம் செய்தார்.
இந்த வழக்குகளை கண்காணித்த வழக்கறிஞர்கள், K மற்றும் M ஆகிய இருவருக்கு 19 முதல் 23 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், 24 பிரம்பு அடிகளும் வேண்டும் என்றும் கோரினர்.
L-க்கு 11 முதல் 16.5 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், தடியடிக்கு பதிலாக மேலும் ஆறு மாத சிறைத் தண்டனையும் கேட்டனர்.
அவர்கள் 17 முதல் 21 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், N-க்கு 24 பிரம்பு அடிகளும் தண்டனையாக வழங்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.