20 ஆண்டுகளுக்கு பின்னர்... ஆசிய நாட்டில் பெண் ஒருவருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றம்
சுமார் 20 ஆண்டுகளுக்கு பின்னர் முதன்முறையாக சிங்கப்பூரில் பெண் ஒருவருக்கு தூக்கு தனடனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மரண தனடனை நிறைவேற்றம்
தொடர்புடைய மரண தனடனை தீர்ப்புக்கு மனித உரிமைகள் அமைப்புகள் கடுமையாக எதிர்ப்புகள் தெரிவித்திருந்தும் தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. சிங்கப்பூரை சேர்ந்த 45 வயது சரிதேவி ஜமானி என்பவரே, தூக்கிலிடப்பட்டுள்ளார்.
@getty
போதை மருந்து கடத்தல் வழக்கில் சிக்கிய இவருக்கு, உள்ளூர் நேரப்படி வெள்ளிக்கிழமை விடிகாலையில் தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. 30 கிராம் அளவுக்கு ஹெராயின் கடத்தியதற்காக 2018ல் சரிதேவிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
2004க்குப் பிறகு சிங்கப்பூரில் தூக்கிலிடப்பட்ட முதல் பெண் இவர் என்றே நம்பப்படுகிறது. மேலும், சம்பவம் தொடர்பில் சரிதேவியால் முறையான தரவுகளை விசாரணை அதிகாரிகளிடம் வழங்க முடியாமல் போனதாக வாதிட்டது, நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டது.
மாதம் ஒருவருக்கு தூக்கு தண்டனை
அத்துடன், சம்பவத்தின் போது சரிதேவி போதை மருந்து உட்கொண்டிருந்ததாகவும் உறுதி செய்யப்பட்டது. இந்த நிலையில், சரிதேவிக்கு வழங்கப்பட்ட மரண தண்டனையை நிறுத்த சர்வதேச அளவில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
@getty
மேலும், இந்த வாரத்தில் தூக்கிலிடப்படும் இரண்டாவது நபர் சரிதேவி. மட்டுமின்றி, மார்ச் 2022ல் அரசாங்கம் மரணதண்டனையை மீண்டும் நிறைவேற்ற தொடங்கியதிலிருந்து மரணமடைந்த 15 வது கைதி இவர்.
கொரோனா பெருந்தொற்று காலகட்டத்தில், 2 ஆண்டு காலம் சிங்கப்பூரில் மரண தண்டனை நிறைவேற்றாமல் வைத்திருந்தனர். ஆனால் அதன் பின்னர், தற்போது சராசரியாக மாதம் ஒருவருக்கு தூக்கு தண்டனை நிறைவேறும் நிலைக்கு சிங்கப்பூர் அரசாங்கம் தள்ளப்பட்டுள்ளதாக மனித உரிமைகள் ஆர்வலர்கள் குறிப்பிடுகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |