சிங்கப்பூரில் கடை திருட்டில் ஈடுபட்ட இன்ஸ்டா பிரபலம்: நீதிமன்றம் விதித்த வினோத தண்டனை
சிங்கப்பூரை சேர்ந்த இன்ஸ்டாகிராம் பிரபலம் கடை திருட்டு சம்பவத்தில் வித்தியாசமான தண்டனையை பெற்றுள்ளார்.
திருட்டு சம்பவத்தில் கையும் களவுமாக சிக்கிய இன்ஸ்டா பிரபலம்
சிங்கப்பூரை சேர்ந்த 30 வயது பெண் இன்ஸ்டாகிராம் பிரபலம் ஜீனி யமகுச்சி, கடந்த ஆகஸ்ட் 25ம் திகதி அதிகாலை 2.30 மணியளவில் ஆர்ச்சர்ட் சென்ட்ரல் பகுதியில் உள்ள டான் டான் டோங்கி என்ற கடையில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார்.
சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் சமீபத்தில் கைது செய்யப்பட்ட ஜீனி யமகுச்சி S$628.90 (இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.43,483) மதிப்புள்ள 27 பொருட்களை திருடியதாக ஒப்புக் கொண்டுள்ளார்.
நீதிமன்றம் விதித்துள்ள தண்டனை
இதையடுத்து அவருக்கு டே ரிப்போர்ட்டிங் ஆர்டர்(Day Reporting Order-DRO) என்ற தண்டனை ஜீனி யமகுச்சி-க்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்த தண்டனையின் படி, ஜீனி யமகுச்சி இரவு நேரங்களில் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது, மேலும் அவர் தினமும் மேற்பார்வை மையத்திற்கு சென்று அறிக்கை சமர்பிக்க வேண்டும்.
ஜீனி யமகுச்சியை கண்காணிக்க எலக்ட்ரானிக் டேக் ஒன்றை அணிய வேண்டும், இதன் மூலம் அவர் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை வீட்டை விட்டு வெளியே செல்லாமல் இருப்பது கண்காணிக்கப்படும்.
இந்த வினோதமான தண்டனையின் ஏற்றுக் கொண்டதன் மூலம் ஜீனி யமகுச்சி அபராதம் மற்றும் சிறைத் தண்டனையை தவிர்த்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |