உயிரிழந்த தாய் சடலத்துடன் 6 ஆண்டுகள் வாழ்ந்த மகன் - அதிர்ச்சி சம்பவம்
இத்தாலியில் பென்ஷன் பணத்திற்காக தன் தாய் இறந்த சடலத்துடன் ஒருவர் 6 ஆண்டுகள் வாழ்ந்து வந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தாய் சடலத்துடன் 6 ஆண்டுகள் வாழ்ந்த மகன்
இத்தாலியைச் சேர்ந்தவர் ஹெல்கா மரியா ஹெகன்பார்த். இவர் தன் மகனுடன் வாழ்ந்த இவர், 86 வயதில் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார்.
ஹெல்காவிற்கு மாதம் தோறும் பென்ஷன் பணம் வந்துக் கொண்டிருந்தது.
ஹெல்கா இறந்துவிட அவருடைய மகனுக்கு பென்ஷன் பணம் கிடைக்காமல் போய்விடுமோ என்று நினைத்த அவர், ஹெல்கா இறந்ததை யாரிடம் சொல்லாமல் மறைத்தார்.
இதனையடுத்து, மகன் ஹெல்காவின் உடலை வீட்டிலேயே சடலம் வைக்கும் பையில் சுற்றி வைத்துள்ளார். சந்தேகம் அடைந்த அக்கம், பக்கத்தினர் ஹெல்கா எங்கே என்று மகனிடம் விசாரிக்க, அவர் சொந்த ஊரான ஜெர்மனிக்கு சென்றுவிட்டார் என்று பொய் கூறியுள்ளார். இதனால், அக்கம், பக்கத்தினர் ஹெல்காவை குறித்து கண்டுக்கொள்ளவில்லை.
மகனை கைது செய்த போலீசார்
இப்படியே 6 ஆண்டுகள் ஓடின. தாய்க்கு வந்த பணத்தை மகன் எடுத்து பயன்படுத்தி வந்துள்ளார். இதனையடுத்து, இத்தாலி நாட்டு அதிகாரிகளுக்கு சந்தேகம் வந்தது. ஹெல்கா கடந்த 6 ஆண்டுகளாக எந்தவித சுகாதார அட்டையை பயன்படுத்தவில்லை.
கோவில் 19 காலத்திலும் அவருக்கு மருத்துவ உதவி தேவைப்படவில்லை. இதனையடுத்து கடந்த மே 25ம் தேதி ஹெல்கா தங்கியிருந்த வீட்டிற்கு அதிகாரியாக அதிரடியாக நுழைந்து சோதனை செய்தனர்.
அப்போது, வீட்டில் இருந்த சவப்பையை பார்த்து அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள், ஹெல்காவின் இறந்த சடலத்துடன் மகன் 6 ஆண்டுகளாக அதே வீட்டில் வசித்து வந்தது தெரியவந்தது.
கடந்த 6 ஆண்டுகளாக 1.56 லட்சம் யூரோ அதாவது இந்திய மதிப்பில் ரூ.1.56 கோடி பென்ஷன் தொகையை ஹெல்காவின் மகன் வாங்கி பயன்படுத்தி வந்துள்ளார். இதனையடுத்து, இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.