பாலியல் பொம்மைகளுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்: பிரபல நாடு எடுத்துள்ள முக்கிய முடிவு
தென் கொரிய நாட்டின் அழகிய மரபுகளுக்கு தீங்கு விளைவித்தாலும், பாலியல் பொம்மைகளுக்கு விதிக்கப்பட்டு இருந்த தடையை தென் கொரிய நீதிமன்றம் நீக்கியுள்ளது.
பாலியல் பொம்மைகளுக்கு தடை
தென் கொரியாவில் வயது வந்தவர்கள் பயன்படுத்தும் பாலியல் பொம்மைகளை இறக்குமதி செய்ய தடை சட்டங்கள் அல்லது விதிமுறைகள் எதுவும் இல்லை என்றாலும், நாட்டின் அழகான மரபுகள் மற்றும் பொது ஒழுக்கத்திற்கு தீங்கு விளைவிக்கும் பொருட்களின் இறக்குமதியை தடை செய்யும் சட்டத்தின் ஒரு பிரிவைப் பயன்படுத்தி, 2018 ஆம் ஆண்டு முதல் ஆயிரக்கணக்கான பொருட்களை சுங்கத் துறை அதிகாரிகள் கைப்பற்றியதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
AFP
இதற்கிடையில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பாலியல் பொம்மைகளுக்கு எந்த தடையும் தென் கொரியாவில் இல்லாத நிலையில், சுங்கத் துறை அதிகாரிகளால் பாதிக்கப்பட்ட இறக்குமதியாளர்கள் நீதிமன்றத்தில் முறையீடு செய்தனர்.
தடையை நீக்கிய நீதிமன்றம்
இந்நிலையில் இறக்குமதியாளர்கள் தொடுத்த வழக்கை விசாரித்த தென் கொரிய நீதிமன்றங்கள், மக்கள் தங்களது தனிப்பட்ட இடங்களிலேயே பாலியல் பொம்மைகளை பயன்படுத்துகின்றனர் என்றும், இவை மனித கண்ணியத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்தாது என்று அறிவித்து கைப்பற்றப்பட்ட பாலியல் பொம்மைகளை உடனடியாக விடுவிக்க சுங்க துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக தென் கொரிய கஸ்டம்ஸ் சர்வீஸ் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், நாட்டிற்குள் நுழையும் வயதுவந்த பாலின பொம்மைகளுக்கான வழிகாட்டுதலை திருத்தியுள்ளதாக அறிவித்துள்ளது.
(AP/REX/Shutterstock)
இருப்பினும் அவுஸ்திரேலியா, பிரித்தானியா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட பிற நாடுகளின் விதிமுறைகளுக்கு இணங்க, குழந்தை போன்ற செக்ஸ் பொம்மைகள் அல்லது குறிப்பிட்ட நபர்களை உள்ளடக்கிய பிற பாலின பொம்மைகளை இறக்குமதி செய்ய தடை தொடரும் என்று குறிப்பிட்டுள்ளது.
தென் கொரிய பாலியல் பொம்மை இறக்குமதியாளர் நீதிமன்றத்தின் உத்தரவை வரவேற்றுள்ளார்.மேலும் இதுவரை 20 பொம்மைகள் வரை மீட்டெடுத்த லீ, நீதிமன்றத்தின் உத்தரவு நியாயமானது ஆனால் தாமதமானது என்று தெரிவித்தார்.