உலகின் 6-வது உயரமான கட்டிடத்தில் ரோப் இல்லாமல் ஏறிய நபர் - பின்பு நடந்தது என்ன?
சீயோலில் உலகின் மிகவும் 6-வது உயரமான கட்டிடத்தில் ஆபத்தான முறையில் ரோப் இல்லாமல் கைகளால் பிடித்தவாறு ஏறிய நபரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
உயரமான கட்டிடத்தில் ரோப் இல்லாமல் ஏறிய நபர்
சியோலில் உள்ள வானளாவிய கட்டிடத்தில் ஏறுவதை பாதியிலேயே கைவிடுமாறு தென் கொரிய அதிகாரிகள் அவரை வற்புறுத்தும் வரை, உலகின் ஆறாவது மிக உயரமான கட்டிடமான லோட்டே வேர்ல்ட் டவரை கயிறுகள் இல்லாமல் அளவிட ஒரு பிரிட்டிஷ் மனிதர் முயன்றார்.
இன்று சீயோலில் உள்ள உலகின் 6-வது உயரமான கட்டிடத்தில் ரோப் இல்லாமல் கைகளால் பிடித்தவாறே பிரிட்டிஷ் நபர் ஒருவர் ஏறினார்.
@CNN
இது குறித்து காவல்துறையினருக்கு உடனடியாக தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் 123 மாடிகள் கொண்ட கட்டடத்தில் 73-வது மாடியில் அந்த நபர் ஏறியபோது அவரை தடுத்து நிறுத்தினர்.
தற்போது, இது தொடர்பான வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் சற்றே அதிர்ச்சி அடைந்து கமெண்ட் செய்து வருகின்றனர்.
A British man attempted to scale the Lotte World Tower, the world's sixth tallest building, without ropes until South Korean authorities forced him to abandon his climb more than half way up the skyscraper in Seoul pic.twitter.com/5kJUO63z7b
— Reuters (@Reuters) June 12, 2023