திருமணம் செய்தால் அரசே 12 லட்ச ரூபாய் வழங்கும் - எந்த நாட்டில் தெரியுமா?
குழந்தை பிறப்பு விகித சரிவு, உலகளவிலான பிரச்சினையாக உருவெடுத்து வருகிறது.
மக்கள் தொகையை கட்டுப்படுத்த பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வந்த சீனா போன்ற நாடுகள் கூட, நிலைமையை உணர்ந்து பிறப்பு விகிதத்தை அதிகரிப்பதற்கான திட்டங்களை கையிலெடுத்துள்ளது.
திருமணம் செய்தால் ரூ.12 லட்சம்
அதே போல் உலகளவில் குறைந்த பிறப்பு விகிதத்தை கொண்ட நாடுகளில் ஒன்றான தென்கொரியாவும் பிறப்பு விகிதத்தை அதிகரிக்கும் திட்டத்தை செயல்படுத்த முன்வந்துள்ளது.
பிறப்பு விகிதத்தை அதிகரிக்கும் வகையில் திருமணம் செய்துகொள்ளும் தம்பதிகளுக்கு லட்சக்கணக்கான பணத்தை வாரி வழங்குகிறது.
பூசன் மாவட்டத்தில் நடைபெற்ற திருமண பொறுத்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு திருமணம் செய்த தம்பதிகளுக்கு அரசு சார்பில், 14,700 அமெரிக்க டொலர்(இந்திய மதிப்பில் ரூ12.50 லட்சம்) வழங்கப்படுகிறது.
இதில் டேட்டிங் செய்வதற்கு, திருமண நிச்சயதார்த்தம், தேனிலவு என பல்வேறு கட்டங்களாக இந்த பணம் வழங்கப்படுகிறது.
இதே போல் தென்கொரியாவின் பல்வேறு நகராட்சிகளிலும் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
தெற்கு கியோங்சாங் மாகாணத்தின் ஜியோச்சாங் கவுண்டியில், 3 மாதங்களுக்கும் மேலாக அங்கு வசிக்கும் 19 முதல் 45 வயதுடைய புதுமணத் தம்பதிகள் 3 ஆண்டுகளுக்கு ஆண்டுதோறும் ரூ.37,000 பெறுகிறார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |