கருக்கலைப்பு மாத்திரைகளை ஊசி மூலம்.,காதலிக்கு ரகசியமாக செலுத்திய நபர்: 10 ஆண்டுகள் சிறை
ஸ்பெயின் நாட்டில் காதலியின் கருவை கலைக்க, மாத்திரைகளை ஊசி மூலம் செலுத்திய நபருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கர்ப்பத்தை கலைக்க
ஸ்டீபன் டூஹான் (33) என்ற நபர் ஸ்காட்டிஷ் ஆம்புலன்ஸ் சேவையில் The Clinical Team Leader ஆக மருத்துவ பிரிவில் பணியாற்றி வந்தார்.
திருமணமான இவர் 2021ஆம் ஆண்டு ஸ்பெயினியில் விடுமுறையில் இருந்தபோது பெண்ணொருவரை சந்தித்துள்ளார்.
பின்னர் இருவரும் நெருங்கி பழகியுள்ளனர். இந்த நிலையில் 2023 மார்ச்சில் குறித்த பெண் கர்ப்பமாகியுள்ளார்.
அவரது கர்ப்பத்தை கலைக்க நினைத்த டூஹான், மாத்திரைகளை நொறுக்கி ஊசி வழியாக எடுத்து, அப்பெண்ணுக்கு தெரியாமலேயே செலுத்தியுள்ளார்.
10 ஆண்டுகள் சிறை
இதனையடுத்து தொடர்ச்சியான வலியை அனுபவித்த குறித்த பெண் மருத்துவமனையை நாடியுள்ளார். அப்போது அவருக்கு கருக்கலைப்பு ஏற்பட்டது தெரிய வந்துள்ளது.
இதுகுறித்த விசாரணையின்போது, அப்பெண் தான் கர்ப்பமாக இருப்பதாக கூறிய அதே நாளில், 'Misoprostol' என்ற மருந்தைப் பற்றிய மருத்துவத் தகவல்களை டூஹான் சரிபார்த்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த நிலையில், பிறக்காத குழந்தையை கொல்ல முயன்ற டூஹானுக்கு நீதிமன்றம் 10 ஆண்டுகள் மற்றும் 6 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது.
இந்த தீர்ப்பில் அவர் மீது தாக்குதல், பாலியல் வன்கொடுமை போன்ற குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்பட்டது. அதனை அவர் ஒப்புக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |