உக்ரைன் போரில் துண்டிக்கப்பட்ட ஸ்டார்லிங்க் இணைய சேவை: வெளியான முக்கிய தகவல்
எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் நெட்வொர்க் சேவை உக்ரைன் போர் களத்தில் சிறிது நேரம் செயலிழந்ததாக தெரியவந்துள்ளது.
உக்ரைன் போரில் எலான் மஸ்க்கின் பங்கு
உக்ரைன் - ரஷ்யா போரின் முன்கள வரிசையில் உக்ரைனுக்கு ராணுவத்திற்கு தேவையான இணைய சேவையை உலகின் முதல் பணக்காரரான எலான் மஸ்க் ஸ்டார்லிங்க் நிறுவனம் வழங்கி வருகிறது.
இந்த சேவையை மேலும் வலுப்படுத்தும் விதமாக பல மேற்கத்திய நாடுகளுக்கும் உக்ரைனுக்கு 50,000 க்கும் மேற்பட்ட ஸ்டார்லிங்க் இணைய சேவை முனையங்களை வழங்கியுள்ளது.
எலான் மஸ்க்கின் இந்த மிகப்பெரிய ஆதரவை குலைக்கும் விதமாக இதற்கு முன்பு ரஷ்யா ஸ்டார்லிங்க் நிலையங்களை தாக்கப்போவதாக அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
ஸ்டார்லிங்க் சேவை பாதிப்பு
இந்நிலையில் ஸ்டார்லிங்க் நெட்வொர்க் சேவை உக்ரைன் போர் களத்தில் சிறிது நேரம் செயலிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக உக்ரைன் ஆயுதப் படையின் ட்ரோன் அமைப்புகளின் தளபதி ராபர்ட் மட்யார் டெலிகிராம் பக்கத்தில் தெரிவித்த தகவலில், ஸ்டார்லிங்க் இணைய சேவை உள்ளூர் நேரப்படி காலை 7.28 மணிக்கு முடங்கியதாக தெரிவித்துள்ளார்.
பின்னர் அடுத்த அரை மணி நேரத்திற்கு பிறகு இணைய சேவையானது படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த சேவை பாதிப்பை Downdetector அறிக்கைகளும் வெளிப்படுத்தி உள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |