பட்டினிச்சாவின் விளிம்பில் 300 மில்லியன் மக்கள்: அதிரவைக்கும் தகவல்
கடுமையான உணவுப் பாதுகாப்பின்மை தொடர்ந்து ஆபத்தான விகிதத்தில் அதிகரித்து வரும் நிலையில், கிட்டத்தட்ட 300 மில்லியன் மக்கள் பட்டினியால் இறக்கும் அபாயத்தில் உள்ளதாக அதிரவைக்கும் அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது.
தொடர்ந்து ஆறாவது ஆண்டாக
அதிகரித்து வரும் மோதல்கள் மற்றும் மனிதாபிமான உதவிககள் ரத்து, காலநிலை மாற்றம் மற்றும் பொருளாதார அதிர்ச்சிகள் ஆகியவற்றுடன் கடந்த ஆண்டு கூடுதலாக 13.7 மில்லியன் மக்களை நாள்பட்ட உணவுப் பாதுகாப்பின்மைக்குள் தள்ளியது.
மட்டுமின்றி, கடுமையான உணவுப் பாதுகாப்பின்மையை எதிர்கொள்ளும் மக்களின் எண்ணிக்கை தொடர்ந்து ஆறாவது ஆண்டாக அதிகரித்துள்ளது. தற்போது இந்த எண்ணிக்கை 295.3 மில்லியன் என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
இந்த எண்ணிக்கையானது GRFC நிபுணர்களால் பகுப்பாய்வு செய்யப்பட்ட 53 நாடுகளின் மக்கள்தொகையில் கிட்டத்தட்ட கால் பகுதியை குறிக்கிறது. மிகவும் நீண்டகால உணவுப் பற்றாக்குறையை எதிர்கொள்ளும் மக்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டு இரு மடங்கிற்கும் அதிகமாகியுள்ளது.
அவர்களில் 95 சதவீதத்திற்கும் அதிகமானோர் காஸா பகுதி அல்லது சூடானில் வாழ்கின்றனர். இருப்பினும் ஹெய்தி, மாலி மற்றும் தெற்கு சூடான் ஆகிய நாடுகளில் இதேபோன்ற உணவுப் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்ட குறிப்பிடத்தக்க மக்கள் தொகை இருருப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.
சூடானில், மோசமடைந்து வரும் உள்நாட்டுப் போர், 24 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் கடுமையான உணவுப் பாதுகாப்பின்மையை எதிர்கொண்டு, பஞ்சத்தை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வழிவகுத்தது.
2.1 மில்லியன் பாலஸ்தீனியர்கள்
காஸா பகுதிக்குள் நிலைமைகளும் மோசமடைந்துள்ளது, கடந்த ஆண்டு மக்கள்தொகையில் பாதி பேர் உணவுப் பற்றாக்குறையால் பாதிக்கப்படுவார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளதாகக் கூறுகின்றனர்.
மார்ச் மாத தொடக்கத்தில் காஸா பகுதிக்குள் செல்லும் அனைத்து வழிகளும் மூடப்பட்டதைத் தொடர்ந்து, உணவு அணுகல் கடுமையாக தடைசெய்யப்பட்டுள்ளது.
மனிதாபிமான உதவி மீதான இஸ்ரேலிய நிர்வாகத்தின் கடும்போக்கு தொடர்ந்ததால், காஸாவின் சுமார் 2.1 மில்லியன் பாலஸ்தீனியர்கள் பஞ்சத்தின் கடுமையான ஆபத்தில் தள்ளப்படுவார்கள் என்றே ஆய்வறிக்கையில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மியான்மர், நைஜீரியா மற்றும் காங்கோ ஜனநாயகக் குடியரசு போன்ற நாடுகள் உட்பட மோதல்களால் பாதிக்கப்பட்ட 19 நாடுகளில் உணவுப் பாதுகாப்பு மோசமடைந்து வருகிறது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |