புடினின் பயங்கர திட்டம்: பெலாரஸில் நிலைநிறுத்தப்படும் ரஷ்ய அணு ஆயுதங்கள்
பெலாரஸ் நாட்டில் ரஷ்யாவின் அணு ஆயுதங்களை நிலைநிறுத்துவது தொடர்பான ஆவணங்களில் இரு நாட்டு அதிகாரிகளும் கையொப்பமிட்டுள்ளனர்.
புடின் அறிவிப்பு
ரஷ்யாவின் மிக நெருங்கி நட்பு நாடுகளில் ஒன்றாக பெலாரஸ் திகழ்ந்து வருகிறது, அங்கு 1994ல் முதல் ஆட்சி நடத்தி வரும் ஜனாதிபதி அலெக்சாண்டர் லுகாஷென்கோ ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் நெருங்கிய நண்பர்களில் ஒருவராக விளங்கி வருகிறார்.
இந்நிலையில் சமீபத்தில் ரஷ்யா ஜனாதிபதி புடின் பெலாரஸ் நாட்டில் ஜூலை 1ம் திகதிக்குள் அணு ஆயுதங்களுக்கான சேமிப்பு கிடங்கு கட்டப்படும் என்று அறிவித்து இருந்தார்.
Getty
இது பெலாரஸ் நாட்டின் மீது ரஷ்யா செலுத்தும் அதிகார உச்சவரம்பு என்று பல்வேறு உலக நாடுகள் கருத்துகள் வெளியிட்டன.
திட்டம் கையொப்பம்
ரஷ்ய ஜனாதிபதி புடினின் இந்த அறிவிப்பை தொடர்ந்து இருநாட்டுகளை சேர்ந்த பாதுகாப்பு துறை அமைச்சர்கள் ஷோய்கு மற்றும் க்ரெனின் ஆகிய இருவரும் இன்று நேரில் சந்தித்து பெலாரஸில் ரஷ்யாவின் மூலோபாயமற்ற அணு ஆயுதங்களை நிலைநிறுத்துவது தொடர்பான ஆவணத்தில் கையெப்பமிட்டனர்.
The defense ministers of the two dictatorial regimes #Shoigu and #Khrenin signed documents on the deployment of #Russian non-strategic nuclear weapons in #Belarus.
— NEXTA (@nexta_tv) May 25, 2023
Shoigu said that control over these weapons remains with Russia, as well as the decision to use them.
Earlier,… pic.twitter.com/8VKWQgMAzj
இதையடுத்து ரஷ்ய பாதுகாப்பு துறை அமைச்சர் ஷோய்கு வழங்கிய தகவலில், பெலாரஸில் நிலைநிறுத்தப்படும் அணு ஆயுதங்கள் ரஷ்யாவின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் என்றும், அதை பயன்படுத்துவதற்கான முடிவும் ரஷ்யாவின் கையில் இருப்பதாக தெரிவித்துள்ளார்.