சூடானில் தொடரும் உள்நாட்டுப் போர்: செல்போன் டார்ச் வெளிச்சத்தில் மகப்பேறு அறுவை சிகிச்சை
சூடானில் நாட்டில் உள்நாட்டு போர் நடந்து வரும் சூழலில், மின்சாரம் இல்லாத நெருக்கடியில் செல்போன் டார்ச் வெளிச்சத்தில், மகப்பேறு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
சுடானில் வலுக்கும் போர்
சூடானில் ராணுவம் மற்றும் துணை ராணுவத்தினரிடையே, கடந்த ஒரு மாதங்களாக உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. இரு ராணுவத்தினரும் அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக போரில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
@bbc
இதில் அப்பாவி மக்கள் உட்பட, ராணுவ வீரர்களும் கொல்லப்பட்டுள்ளனர். இதனால் அந்நாட்டிலிருந்த வெளிநாட்டினர் தங்களது நாட்டு ராணுவத்தின் உதவியின் மூலம் சொந்த நாடுகளுக்கு திரும்பியுள்ளனர்.
இந்நிலையில் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும் துப்பாக்கி சூடு காரணமாக, பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர முடியாத சூழல் உருவாகியுள்ளது.
@bbc
இதனால் போருக்கு அஞ்சி ஏராளமானோர் அண்டை நாடுகளுக்கு தப்பி சென்று விட்ட நிலையில், ஒரு சில மருத்துவர்கள் மட்டுமே அங்கு தங்கியுள்ளனர்.
கடுமையான சூழல்
மேலும் தலைநகர் கார்ட்டூமில் உள்ள மருத்துவனைகளில் தண்ணீர் கூட இல்லாத சூழல் உண்டாகியுள்ளது. மின்சாரமில்லாமல் நோயாளிகள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.
@bbc
இதனிடையே அங்கிருந்த ஒரு பெண்ணுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட, மருத்துவர்கள் செல்போன் வெளிச்சத்தின் மூலமாக மகப்பேறு அறுவை சிகிச்சை செய்துள்ளனர்.
மேலும் அம்மருத்துவமனையில் மருத்துவர்கள் கடுமையான மன அழுத்தத்திற்கு ஆளாவதாக மருத்துவர் தெரிவித்துள்ளார். மயக்க ஊசி மருத்துவர்கள் மற்றும் அறுவை சிகிச்சை நிபுணர்கள் இல்லாமலே, அறுவை சிகிச்சை செய்வதால் நிறைய சிக்கல்களை சந்திப்பதாக தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், பலரும் அம்மருத்துவனை ஊழியர்களின் செயலை பாராட்டி வருகின்றனர்.