டைட்டன் நீர்மூழ்கியில் ரூபிக்ஸ் கியூப் எடுத்துச்சென்ற கோடீஸ்வரரின் மகன்! கடலுக்குள் கரைந்த கனவு
டைட்டானிக் கப்பலின் இடிபாடுகளைக் காண சென்ற டைட்டன் நீர்மூழ்கி கப்பலில் உயிரிழந்த ஐவரில் ஒருவரான சுலைமான் தாவூத், உலக சாதனை படைக்க ரூபிக் கியூப்பை தன்னுடன் எடுத்துச் சென்றதாக அவரது தாயார் கிறிஸ்டின் தாவூத் தெரிவித்துள்ளார்.
19 வயது மாணவன்
பத்தொன்பது வயதான சுலைமான் பாகிஸ்தானின் கராச்சியை தலைமையிடமாகக் கொண்ட பன்னாட்டு நிறுவனமான எங்ரோவின் துணைத் தலைவராக இருக்கும் கோடீஸ்வரர் ஷாஜதா தாவூத்தின் மகன் ஆவார். கிளாஸ்கோவில் உள்ள ஸ்ட்ராத்கிளைட் பிசினஸ் ஸ்கூல் பல்கலைக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவராக இருந்தார்.
Picture: Dawood Group and Engro Corporation
இந்த சோகமான சம்பவத்தில் ஷாஜதா தாவூத்தும் உயிரிழந்தார். அவரும், உயிரிழந்த மற்ற மூவரும் 40 வயதைக் கடந்தவர்கள். ஆனால் சுலைமான் வெறும் பதின்ம வயதைத் தாண்டாத இளைஞன் என்பது குறிப்பிடத்தக்கது.
கின்னஸ் சாதனை கனவு
ரூபிக்ஸ் கியூபில் புதிய சாதனையை படிப்பதற்கான தனது முயற்சியைப் பற்றி கின்னஸ் அதிகாரிகளுக்கு சுலைமான் தெரிவித்ததாகவும், அந்த தருணத்தைப் படம்பிடிக்க ஷாஜதாவிடம் கமெரா இருந்ததாகவும் கிறிஸ்டின் கூறுகிறார்.
ரூபிக்ஸ் கியூப் மீது தனது மகனின் காதல் குறித்து பேசிய தாய் கிறிஸ்டின், சுலைமான் எங்கு சென்றாலும் ரூபிக்ஸ் கியூப்பை தன்னுடன் எடுத்துச் செல்வான். கடல் மட்டத்திலிருந்து 3,700 மீட்டர் கீழே ரூபிக்ஸ் கியூபை முடிக்க சுலைமான் ஆர்வமாக இருந்தான் என்று கூறினார்.
Dawood Family
மேலும், அவனுக்கு அர்ப்பணிக்கும் விதமாக ரூபிக்ஸ் கியூப்பை முடிக்க தானும் தனது மகளும் இணைந்து பணியாற்றுவோம் என்றும் தனது கணவரின் பணியைத் தொடருவோம் என்றும் கிறிஸ்டின் கூறினார்.
நானும் சுலேமானுடன் அதே நீர்மூழ்கி கப்பலில் சொல்லவேண்டியது
1912-ஆம் ஆண்டு பனிப்பாறையில் மோதிய டைட்டானிக் கப்பலின் இடிபாடுகளைக் காண 5 பயணிகளுடன் வடக்கு அட்லாண்டிக் பெருங்கடலில் இறங்கிய ஓஷன் கேட் எக்ஸ்பெடிஷன்ஸ் நிறுவனத்தின் 'டைட்டன்' ஆய்வுக் கப்பல் விபத்துக்குள்ளானது.
ஜூன் 18 அன்று, இந்த சம்பவம் நடக்கும்போது கிறிஸ்டின் தாவுத் அவரது மகளுடன், ஆதரவுக் கப்பலான போலார் பிரின்ஸ் கப்பலில் இருந்துள்ளார். அப்போது இரண்டு மாநின்ரேத்தில் டைட்டன் நீர்முழ்கி கப்பலின் தொடர்பு துண்டிக்கப்பட்டது. அப்போது இதுகுறித்து தெரிவித்தபோது தனக்கு ஒன்றும் புரியவில்லை என கிறிஸ்டின் தாவூத் தெரிவித்துள்ளார்.
Facebook
டைட்டானிக்கின் எச்சங்களைக் காண முதலில் ஷாஜதாவுடன் தானும் செல்ல திட்டமிட்டிருந்ததாகவும், ஆனால் கோவிட் காரணமாக தனது முடிவை மாற்றிக் கொண்டதாகவும் அவர் கூறினார். சுலைமான் தன்னுடன் அந்த கப்பலில் பயணிக்கவே முடிவு செய்ததாக கிறிஸ்டின் தாவூத் தெரிவித்தார்.
Suleman Dawood, Rubik's Cube, Titanic submersible, Guinness World Records, Christine Dawood
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |