உக்ரைனுக்கு போர் விமானங்கள் வழங்கும் நட்பு நாடுகளை ஆதரிக்க தயார்: பிரித்தானிய பிரதமர் அறிவிப்பு
உக்ரைனுக்கு போர் விமானங்களை வழங்கும் நட்பு நாடுகளை ஆதரிக்க தயாராக இருப்பதாக பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார்.
உக்ரைனுக்கு போர் விமானங்கள்
உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் தாக்குதல் இன்னும் சில தினங்களில் ஓராண்டை நிறைவு செய்ய இருக்கும் நிலையில், ரஷ்ய ஜனாதிபதி புடின் மிகப்பெரிய தாக்குதல் ஒன்றுக்கு திட்டமிட்டு வருவதாக மேற்கத்திய நாடுகளின் உளவுத் துறை எச்சரிக்கை தெரிவித்து வருகிறது.
இதற்கிடையில் உக்ரைனுக்கு போர் விமானங்கள் வழங்குவது தொடர்பாக பிரித்தானியா, பிரான்ஸ் ஜேர்மனி மற்றும் போலந்து ஆகிய நாடுகள் தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
I’m here in Germany for this year’s @MunSecConf, joining world leaders like @VP Harris & @Bundeskanzler to discuss security challenges – particularly Putin’s horrific war in Ukraine.
— Rishi Sunak (@RishiSunak) February 18, 2023
I have urged delegates to double down on their military & political support for Ukraine. pic.twitter.com/DTqwMY1SZR
சமீபத்தில் பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் உக்ரைனுக்கு போர் விமானங்களை வழங்குவது தொடர்பாக எந்தவொரு இறுதி முடிவும் எடுக்கப்படவில்லை என்றும், உக்ரைனுக்கு வழங்கப்படும் உதவிகள் நிலைமையை மேலும் கடினமாக்கி விடக்கூடாது என்றும் தெரிவித்து இருந்தார்.
ஆதரவு வழங்க தயார்
இந்நிலையில் ஜேர்மனியில் நடைபெற்ற முனிச் பாதுகாப்பு மாநாடு பேசிய பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக், உக்ரைனுக்கு போர் விமானங்களை வழங்கும் நட்பு நாடுகளை ஆதரிக்க பிரித்தானியா தயாராக இருப்பதாக தெரிவித்தார்.
அத்துடன் உக்ரைனிய வீரர்களுக்கு போர் விமானங்களை இயக்குவதற்கான பயிற்சியை பிரித்தானிய ஏற்கனவே வழங்கி வருவதாகவும், உக்ரைனுக்கான ஆதரவை இரட்டிப்பாக்க வேண்டும் என்றும் நட்பு நாடுகளை மீண்டும் வலியுறுத்தினார்.
CREDIT: The Office of the President of Ukraine
இத்தகைய செயல்முறைகள் உக்ரைன் தன்னை தானே பாதுகாத்துக் கொள்ளவும், ரஷ்யாவின் அச்சுறுத்தல்களை விரட்டியடிக்கவும் உதவும் என குறிப்பிட்டார்.
மேலும் நமது கூட்டு முயற்சிகள் மாற்றங்களை ஏற்படுத்தும், இதே போன்றே ஒவ்வொரு நாளும் கடந்தால் ரஷ்ய படைகள் இன்னும் கூடுதலான வலியையும் நடுக்கத்தையும் பெறும் என தெரிவித்தார்.