சர்ச்சைக்குரிய விளம்பரம்... சீனர்களிடம் மன்னிப்புக் கேட்கும் சுவிஸ் நிறுவனம்
சுவிஸ் கைக்கடிகார நிறுவனம் ஒன்று வெளியிட்ட சர்ச்சைக்குரிய விளம்பரத்துக்காக சீனர்களிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டுள்ளது.
சர்ச்சைக்குரிய விளம்பரம்...
பிரபல சுவிஸ் கைக்கடிகார நிறுவனமான ஸ்வாட்ச் (Swatch), சமீபத்தில் விளம்பாம் ஒன்றை வெளியிட்டிருந்தது.
விளம்பரத்தில் தோன்றிய மொடல், தன் கைகளால் தன் கண்களின் ஓரத்தை மேல் நோக்கி இழுத்ததால், அவரது கண்கள் சிறியதாக காட்சியளித்தன. ஆசியர்களை கேலி செய்வதற்கு இப்படி செய்வதுண்டாம்.
இந்த விடயம் சீனாவில் பெரும் சர்ச்சையை உருவாக்கியது. ஸ்வாட்ச் நிறுவனம் இனரீதியாக தங்களை கேலி செய்வதாக சீன சமூக ஊடக பயனாளர்கள் கொந்தளித்தார்கள்.
மன்னிப்புக் கேட்கும் சுவிஸ் நிறுவனம்
அந்த விளம்பரம் சீனாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, ஸ்வாட்ச் நிறுவனம் சீனர்களிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டுள்ளது.
சீன சமூக ஊடகமான Weibo மற்றும் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள இடுகை ஒன்றில், தாங்கள் உலகம் முழுவதும் அந்த விளம்பரத்தை அகற்றிவிட்டதாகவும், அந்த விளம்பரம் ஏற்படுத்திய மன வருத்தத்திற்காக மன்னிப்புக் கேட்டுக்கொள்வதாகவும் ஸ்வாட்ச் நிறுவனம் தெரிவித்துள்ளது.
விடயம் என்னவென்றால், சிலர் இந்த மன்னிப்பை ஏற்றுக்கொண்டாலும், மற்றவர்கள் ஸ்வாட்ச் நிறுவன தயாரிப்புகளை புறக்கணிக்குமாறு சீன மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்கள்.
சீனா, ஸ்வாட்ச் நிறுவனத்தின் மிகப்பெரிய சந்தைகளில் ஒன்றாகும். ஏற்கனவே சீனாவில் கடந்த ஆண்டில் ஸ்வாட்ச் நிறுவன தயாரிப்புகள் விற்பனை குறைந்துள்ள நிலையில், இப்படி ஒரு விளம்பரம் வெளியாகி மேலும் பிரச்சினையை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |