சிரியாவில் அமெரிக்கா நடத்திய அதிரடி ட்ரோன் தாக்குதல்: ஐ.எஸ்.ஐ.எஸ் தலைவர் மரணம்
சிரியாவில் அமெரிக்கா நடத்திய ட்ரோன் தாக்குதலில் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத கும்பல் தலைவர் கொல்லப்பட்டு இருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
ஐ.எஸ்.ஐ.எஸ் தலைவர் கொலை
சிரியாவில் உள்ள தீவிரவாத கும்பல்களுக்கு எதிராக அமெரிக்கா தொடர்ந்து தாக்குதல்களை முன்னெடுத்து நடத்தி வருகிறது.
இந்நிலையில் கிழக்கு சிரியா பகுதியில் வெள்ளிக்கிழமை நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில் இஸ்லாமிய நாடான ஈராக் மற்றும் சிரியாவுக்கான தலைவர் கொல்லப்பட்டு இருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
Picture: Isaac Brekken/Getty Images
இது தொடர்பாக அமெரிக்கா ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ள தகவலில், வெள்ளிக்கிழமை நடத்தப்பட்ட வான் தாக்குதல் தீவிரவாத குழு தலைவர் உசாமா அல்-முஹாஜிர்(Usamah al-Muhajir) கொல்லப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளது.
இதன் மூலம் ஐ.எஸ்.ஐ.எஸ் (ISIS)அமைப்பின் தீவிரவாத தாக்குதல் மற்றும் திட்டமிடுதல் திறன் சீர்குலைத்து இருப்பதாக தெரிவித்துள்ளது.
பொதுமக்கள் யாருக்கும் பாதிப்பு இல்லை
அமெரிக்கா நடத்திய இந்த ட்ரோன் தாக்குதலில் பொதுமக்கள் யாரும் உயிரிழந்ததற்கான அறிகுறிகள் இல்லை என்றும், காயமடைந்தவர்கள் யாரேனும் உள்ளனரா என்ற தகவல் திரட்டப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Picture: John Moore/Getty Images
இந்நிலையில் தீவிரவாத கும்பல்களை அழிப்பதில் அமெரிக்க உறுதியுடன் இருப்பதாக அமெரிக்க மத்திய கட்டளைத் தளபதி ஜெனரல் மைக்கேல் குரில்லா தெரிவித்துள்ளார்.
மேலும் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு அந்த பகுதிக்கு மட்டுமல்லாமல், அதை கடந்த பகுதிகளுக்கும் ஆபத்துகளை விளைவிக்கக் கூடியதாக இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
MQ-9 ட்ரோன்களால் நடத்தப்பட்ட இந்த தாக்குதல் நடவடிக்கையின் போது ரஷ்ய விமானங்கள் குறுக்கீடு செய்ததாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
Getty Images