வெறும் புகைப்படம் எடுத்ததற்காக... 1400 நாட்கள் சிறைவைக்கப்பட்ட வெளிநாட்டவர்: சீனாவில் சம்பவம்
சீனாவின் ஷென்சென் பகுதியில் பொலிஸ் அதிகாரிகளை புகைப்படம் எடுத்த நிலையில், உளவு பார்த்ததாக கூறி தைவான் தொழிலதிபர் ஒருவர் அனுபவித்த கொடூர சித்திரவதை வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
பொலிஸ் அதிகாரிகளை புகைப்படம்
கடந்த 2019ல் ஷென்சென் பகுதியில் பொலிஸ் அதிகாரிகளை புகைப்படம் எடுத்ததாக கூறி தைவான் தொழிலதிபரான லீ மெங்-சு கைது செய்யப்பட்டார்.
@getty
அவர் மீது உளவு பார்த்தல் மற்றும் அரச இரகசியங்களை திருடுதல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டு விசாரணைக்கு பின்னர், ஓராண்டு மற்றும் 10 மாதங்கள் சிறை தண்டனைக்கு விதிக்கப்பட்டார்.
இந்த நிலையில் 2021 ஜூலை மாதம் அவர் விடுவிக்கப்பட்டார். ஆனால் அரசியல் உரிமைகள் பறிக்கப்பட்டதாக கூறி, சீனாவில் இருந்து வெளியேற அதிகாரிகள் தரப்பு அவரை அனுமதிக்கவில்லை.
குற்றம் செய்தவர்கள் வெளிநாட்டவர்கள் என்றால், இனி சீனாவுக்கு நுழைய முடியாதபடி தடை செய்து விட்டு, வெளியேற்றுவார்கள். ஆனால் லீ மெங்-சு தைவான் நாட்டவர் என்பதால் சீன அதிகாரிகள் அரசியல் கோணத்தில் இந்த வழக்கை அணுகியுள்ளனர் என்றே கூறப்படுகிறது.
சீனாவுக்கு எதிரான ஆர்ப்பாட்டம்
2019 ஆகஸ்டு மாதம், தொழில் ரீதியாக சீனா சென்றுள்ளார் லீ மெங்-சு. ஆண்டுக்கு இரண்டு முறை சீனா செல்பவர் மட்டுமல்ல, அங்கே பணியாற்றியும் உள்ளார். இந்த நிலையில் Hong Kong சென்றிருந்த அவர், சீனாவுக்கு எதிரான ஆர்ப்பாட்டம் ஒன்றை வேடிக்கை பார்க்கவும், அவர்கள் திணித்த துண்டு பிரசுரம் ஒன்றையும் இவர் கைவசம் வைத்திருந்துள்ளார்.
இதனையடுத்து சீனாவின் ஷென்சென் பகுதிக்கு தொழில்முறை பயணமாக சென்றுள்ளார். அங்கே, விளையாட்டு அரங்கம் ஒன்றில் திரளான பொலிஸ் அதிகாரிகள் மற்றும் ஆயுதம் ஏந்திய வாகனங்களையும் பார்த்துள்ளார்.
cctv
தொடர்ந்து தமது ஹொட்டல் அறையில் இருந்து, அந்த விளையாட்டு அரங்கம் சென்ற லீ மெங்-சு, அந்த பொலிஸ் அணிவகுப்பை புகைப்படமாகவும் பதிவு செய்துள்ளார். ஆனால், ஷென்சென் நகரில் இருந்து தைவான் புறப்பட விமான நிலையம் சென்றவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
இவரிடம் அப்போது 10 காணொளி கமெரா இருந்ததை கவனித்த அதிகாரிகள், சந்தேகத்தின் அடிப்படையில் சோதனை மேற்கொண்டுள்ளனர். அதில், இவரது மொபைலில் பதிவாகியிருந்த பொலிஸ் அணிவகுப்பு புகைப்படங்கள், Hong Kong சென்றிருந்த போது கைப்பற்றிய துண்டு பிரசுரம் என அனைத்தும் இவருக்கு எதிராக அமைந்தது.
ஓராண்டு மற்றும் 10 மாதங்கள் சிறை
தொடர்ந்து 72 நாட்கள் ஹொட்டல் அறையில் சிறை வைக்கப்பட்டார். மூன்று அதிகாரிகள் கண்காணிக்க, அறையில் இருந்து நகரவே அனுமதிக்கப்படவில்லை என்றே தெரிவித்துள்ளார்.
திடீரென்று ஒரு நாள் அவரை அதிகாரிகள் அழைத்து சென்றுள்ளனர். சில மாதங்களுக்கு பிறகு தேசிய ஊடகத்தில் தோன்றிய அவர், சீன மக்களிடம் மன்னிப்பு கேட்கும் நிலைக்கு தள்ளப்பட்டார்.
இதனையடுத்து, நீதிமன்ற விசாரணை முன்னெடுக்கப்பட்டு, ஓராண்டு மற்றும் 10 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளார். சிறையிலும் கொடூர சித்திரவதை அனுபவித்துள்ளார்.
2021 ஜூலை மாதம் அவர் விடுவிக்கப்பட்டாலும். அரசியல் உரிமைகள் பறிக்கப்பட்டதாக கூறி, 2 ஆண்டுகள் சீனாவில் இருந்து வெளியேற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இறுதியாக, 1,400 நாட்களுக்கு பின்னர் லீ மெங்-சு சீனாவில் இருந்து திங்கட்கிழமை தைவான் புறப்பட்டுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |