முதலிரவில் வயிற்று வலியால் கத்திய மணமகள் ; அடுத்த நாள் குழந்தை பெற்ற சம்பவம்!
தெலுங்கானாவில் முதலிரவில் வயிற்று வலியால் கத்திய மணமகள், அடுத்த நாள் குழந்தை பெற்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வயிற்று வலியால் கத்திய மணமகள்
தெலுங்கானா மாநிலம், செகந்திராபாத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு, கிரேட்டர் நொய்டாவை சேர்ந்த ஆண் ஒருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இதனையடுத்து, கடந்த 26ம் தேதி உறவினர்கள் முன்னிலையில் இவர்கள் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது.
இதன் பின், அன்று இரவு மணமக்கள் முதலிரவன்று மணமகள் வயிறு வலிக்கிறது என்று அழுதுள்ளார். இதனால், பயந்து போன மணமகன் உடனடியாக மணமகளை அழைத்துக் கொண்டு மருத்துவமனைக்கு சென்று அனுமதித்தார்.
குழந்தை பெற்ற மணமகள்
மணமகளை பரிசோதனை செய்த மருத்துவர்கள் மணமகள் 7 மாத கர்ப்பிணியாக இருக்கிறாள் என்று கணவரிடம் கூறினர். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தார் மணமகன். அடுத்த நாள் மணமகளுக்கு ஒரு அழகான பெண் குழந்தை பிறந்தது. உடனடியாக பெண் வீட்டாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. ஆனால், மணமகன் வீட்டார் பெண் வீட்டார் ஏமாற்றி கல்யாணம் செய்து விட்டனர் என்று குற்றம் சாட்டினர்.
இது குறித்து காவல் நிலையத்தில் புகார் ஏதும் கொடுக்கப்படவில்லை. மணமகன், மணமகளையும், பிறந்த குழந்தையை ஏற்க மறுத்துவிட்டார். இதனையடுத்து, குழந்தையையும், அந்தப் பெண்ணையும் பெண் வீட்டார் அழைத்துக் கொண்டு சென்றுவிட்டனர். திருமணம் முடிந்து அடுத்த நாள் குழந்தைப் பெற்ற பெண்ணால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |