ஆரம்பமே அடிசறுக்கும் Tesla - இந்தியாவில் எதிர்பார்த்த வரவேற்பு இல்லை
இந்தியாவில் அறிமுகமாகியுள்ள Tesla கார்களுக்கு எதிரிபார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை.
அமெரிக்காவின் பிரபல எலக்ட்ரிக் கார் நிறுவனமான டெஸ்லா, இந்திய சந்தையில் தனது Model Y காருடன் ஜூலையில் அறிமுகமானது. செப்டெம்பரில் விநியோகம் தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டது.
ஆனால் இந்த அறிமுகம் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பை பெறவில்லை.
நிறுவனம் 2,500 கார்களை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ள நிலையில், இதுவரை வெறும் 600 முன்பதிவுகள் மட்டுமே பெற்றுள்ளது.
விலை மற்றும் வரி சிக்கல்
இந்தியாவில் ஓரு எலக்ட்ரிக் காரின் சராசரி விலை ரூ.22 லட்சமாக இருக்கிறது. ஆனால், டெஸ்லா Model Y-ன் விலை ரூ.60 லட்சத்திற்கு மேல் உள்ளது.
மேலும் இந்தியா விதிக்கும் 100 சதவீத இறக்குமதி வரி காரணமாக, டெஸ்லா இதுவரை இந்திய சந்தையை தவிர்த்து வந்தது.
ஆனால், சீனாவின் ஷாங்காய் நகரிலிருந்து கார்களை இறக்குமதி செய்து மும்பை, டெல்லி, புனே மற்றும் குருகிராமில் மட்டுமே விநியோகிக்க திட்டமிட்டுள்ளது.
அமெரிக்கா உடனான இந்தியாவின் வர்த்தக ஒப்பந்தத்திற்கு பின்னர் இறக்குமதி வரிகள் குறைக்கப்படும் என டெஸ்லா நம்பியிருந்தது.
ஆனால், அதற்கு மாறாக ட்ரம்ப் இந்தியா மீது 50 சதவீத வரி விதித்துள்ளார். இது டெஸ்லாவிற்கு மேலும் சவாலாக அமைந்துள்ளது.
சீன பிராண்டுகளுடன் போட்டி
BYD என்ற சீன நிறுவனம் இந்தியாவில் 2021 முதல் 10,000 சொகுசு மின்சார கார்களை விற்றுள்ளது.
இதனால், டெஸ்லா இந்திய சந்தையில் தன்னை நிலைநிறுத்த கடுமையான போட்டியை எத்ரிகொள்கிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Tesla India launch 2025, Tesla Model Y bookings India, Tesla electric car price India, Elon Musk Tesla India, Tesla vs BYD India, Tesla import tax India, Luxury EV market India, Tesla showroom Mumbai Delhi, US-India trade tariff Tesla