பகல்நேர பராமரிப்பு மையத்தில் துப்பாக்கிச்சூடு: 22 குழந்தைகள் உட்பட 34 பேர் மரணம்
பலியானவர்களில் 22 குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் உள்ளடங்குவதாக காவல்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எட்டு மாத கர்ப்பிணியான ஒரு ஆசிரியர் உட்பட நான்கு அல்லது ஐந்து ஊழியர்களை அந்த நபர் முதலில் சுட்டுக் கொன்றார்.
தாய்லாந்தில் குழந்தைகளுக்கான பகல்நேர பராமரிப்பு மையத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் குழந்தைகள் உட்பட 34 பேர் கொல்லப்பட்டனர்.
தாய்லாந்தில் Nong Bua Lam Phu மாகாணத்தில் Uthai Sawan பகுதியில் உள்ள குழந்தைகளுக்கான பகல்நேர பராமரிப்பு மையத்தில் வியாழக்கிழமை நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒரு முன்னாள் பொலிஸ்காரர் 34 பேரைக் கொன்றார், துப்பாக்கிதாரி பின்னர் தன்னைத்தானே சுட்டுக் கொண்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பலியானவர்களில் 22 குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் உள்ளடங்குவதாக காவல்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களில் 2 வயதுக்குட்பட்ட குழந்தைகள் உள்ளடங்குவதாக உள்ளூர் காவல்துறை அதிகாரி ஒருவர் வியாழக்கிழமை தெரிவித்தார்.
துப்பாக்கி ஏந்திய நபர் மதிய உணவு நேரத்தில் வந்தபோது சுமார் 30 குழந்தைகள் மையத்தில் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
நா கிள்ளான் காவல் நிலையத்தின் கண்காணிப்பாளர் சக்ரபாத் விச்சித்வைத்யா, துப்பாக்கிதாரி கடந்த ஆண்டு காவல்துறையில் இருந்து பணிநீக்கம் செய்யப்பட்டதாக தெறித்தார். தாக்குதல்தாரியின் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.
எட்டு மாத கர்ப்பிணியான ஒரு ஆசிரியர் உட்பட நான்கு அல்லது ஐந்து ஊழியர்களை அந்த நபர் முதலில் சுட்டுக் கொன்றார் என்று அதிகரைகள் தெரிவித்தனர். சம்பவம் நடந்த இடத்துக்கு அருகில் இருந்த மக்கள் முதலில் மக்கள் அதை பட்டாசு சத்தம் என்று நினைத்துள்ளனர்.
தாய்லாந்தில் பாரிய துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் அரிதாகவே காணப்படுகின்றன, இருப்பினும் பிராந்தியத்தில் உள்ள மற்ற சில நாடுகளுடன் ஒப்பிடும்போது துப்பாக்கி வைத்திருப்பவர்களின் விகிதம் அதிகமாக உள்ளது, மேலும் சட்டவிரோத ஆயுதங்கள் இங்கு பொதுவானவையாக பார்க்கப்படுகிறது.