பிரித்தானியாவின் கொடூர ஜாக் ரிப்பரை விடவும்... கர்ப்பிணியான சயனைடு கொலைகாரியின் பின்னணி
பிரித்தானியாவின் கொடூர கொலைகாரன் ஜாக் ரிப்பரை விடவும் கர்ப்பிணி ஒருவர் அதிக கொலை செய்துள்ளார் என அஞ்சப்படுகிறது.
திட்டமிட்ட 14 கொலைகள்
தாய்லாந்தை சேர்ந்த Sararat Rangsiwuthaporn என்பவர் சயனைடு விஷம் பயன்படுத்தி மொத்தம் 14 பேர்களை கொன்றுள்ளதாக குற்றஞ்சாட்டப்படுகிறது. 36 வயதான இவர் சுமார் 8 ஆண்டுகாலம் நிதி முறைகேட்டில் ஈடுபட்டு, தம்மால் பாதிக்கப்பட்டவர்களை சயனைடு அளித்து கொன்றுள்ளார்.
@getty
மூத்த பொலிஸ் அதிகாரியின் முன்னாள் மனைவியான Rangsiwuthaporn மீது திட்டமிட்ட 14 கொலைகள் உட்பட 80 குற்றவியல் வழக்குகள் பதியப்பட்டுள்ளது. இதனால் அவர் மரணதண்டனையை தற்போது எதிர்கொள்கிறார்.
பிரித்தானியாவின் கொடூர கொலைகாரன் ஜாக் ரிப்பர் செய்த கொலை எண்ணிக்கையை விடவும் Rangsiwuthaporn அதிக கொலை செய்துள்ளதாக பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மொத்தம் 110,200 பவுண்டுகள்
14 கொலை வழக்குகள் மட்டுமின்றி, விஷம் அளித்தல், போலியான தரவுகள் உருவாக்குதல் மற்றும் திருட்டு வழக்குகளும் பதியப்பட்டுள்ளது. ஆனால் விசாரணையின் போது கொலை செய்துள்ளதை அவர் ஒப்புக்கொள்ள மறுத்ததாகவும், சயனைடு பயன்படுத்தியுள்ளதை ஒப்புக்கொண்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
@getty
இதனிடையே, விசாரணைக் கைதியாக இருந்த நிலையில், கடந்த வாரம் அவருக்கு கருச்சிதைவு ஏற்பட்டதாகவும், மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும், ஆனால் அதற்கும் விசாரணைக்கு தொடர்பில்லை என அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளனர்.
கொல்லப்பட்ட 14 பேர்களிடம் இருந்து மொத்தம் 110,200 பவுண்டுகள் அளவுக்கு நிதி முறைகேடு நடத்தியதாக பொலிசார் உறுதி செய்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |