35 முறை தோல்வியடைந்தவர் இன்று ஐஏஎஸ் அதிகாரி! யார் இவர்?
தன்னுடைய விடாமுயற்சியால் 35 முறை தோல்வியடைந்தும் விஜய் வர்தன் என்பவர் மீண்டும் முயற்சித்து ஐஏஎஸ் அதிகாரி ஆகியுள்ளார்.
யார் இவர்?
இந்திய மாநிலம் ஹரியானாவின் சிர்சாவில் பிறந்து வளர்ந்தவர் விஜய் வர்தன். இவர், ஹிசாரில் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் படித்தார்.
பின்னர் இந்திய நிர்வாக சேவைகளுக்கான போட்டி தேர்வான யுபிஎஸ்சி தேர்வில் இவருக்கு அதிக ஆர்வம் இருந்தது. அதனால், அதற்கு தயாராக டெல்லி சென்றார்.
இதனையடுத்து அவர், 35 அரசு தேர்வுகளில் தோல்வியடைந்தார். மேலும், பல யுபிஎஸ்சி தேர்வுகளிலும் தோல்வியடைந்தார். இந்த தோல்விகள் அனைத்தும் அவரது நம்பிக்கையை குறைக்க முடியவில்லை. அவர் தனது திறமைகளை நம்பினார் மற்றும் தனது இலக்கில் கவனம் செலுத்தினார்.
ஐஏஎஸ் அதிகாரி
பின்பு, கடந்த 2018 ஆம் ஆண்டு நடந்த யுபிஎஸ்சி தேர்வில்,104 -வது ரேங்குடன் முதலில் ஐபிஎஸ் அதிகாரியானார். இருந்தாலும் அவர் திருப்தி அடையவில்லை. தான் பெற்ற தோல்விகளில் இருந்தும், தனது தவறுகளில் இருந்தும் விஜய் வர்தன் கற்றுக்கொண்டார்.
அவர் மீண்டும் 2021 ஆம் ஆண்டு அந்த தேர்வை எழுதி யுபிஎஸ்சியில் தேர்ச்சி பெற்று ஐஏஎஸ் அதிகாரியானார்.
நம்மில் பலர், சில முறை தோல்வி அடைந்தாலே அந்த விஷயத்தை மீண்டும் செய்ய மாட்டோம். ஆனால், விஜய் வர்தன் 35 முறை தோல்வியடைந்து தன்னுடைய விடா முயற்சியால் ஐஏஎஸ் அதிகாரியானது நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது.
இதில், எப்போதும் உங்கள் மீது நம்பிக்கை வையுங்கள் என்பது தான் இளைஞர்களுக்கு விஜய் வர்தன் கூறும் அட்வைஸ்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |