ஆர்டிக் கடலில் ரஷ்யாவுக்கு சொந்தமான அணு ஆயுதம் தாங்கி நீர்மூழ்கிக்கப்பல்: சேட்டிலைட் புகைப்படங்களில் சிக்கியதால் அதிர்ச்சி...
சமீபத்தில், ரஷ்யாவிலிருந்து அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் ரயிலைக் காட்டும் காட்சிகள் வெளியாகி திகிலை ஏற்படுத்தின.
தற்போது, ரஷ்யாவுக்குச் சொந்தமான, அந்த அணு ஆயுதங்களை சுமந்து செல்லக்கூடிய பிரம்மாண்ட நீர்மூழ்கிக்கப்பல் ஒன்று ஆர்டிக் சமுத்திரத்தில் இருப்பது சேட்டிலைட் புகைப்படங்கள் மூலம் தெரியவந்துள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்த நிலையில், அமெரிக்கா முதலான நாடுகள் உக்ரைனுக்கு ஆயுதங்கள் முதலான உதவிகள் செய்ய முன்வந்த விடயம் ரஷ்யாவுக்கு கடும் எரிச்சலை ஏற்படுத்தியது.
ஆகவே, புடின் ஆதரவு தொலைக்காட்சிகளில் அவருக்கு நெருக்கமான பலர் தோன்றி அணு ஆயுத மிரட்டல்கள் விடுத்துவந்தார்கள்.
ஒரு பக்கம் ரஷ்யா அணு ஆயுதமெல்லாம் பிரயோகிக்காது என கூறப்பட்டாலும், மறுபக்கமோ, ரஷ்யாவிலிருந்து அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் ரயிலைக் காட்டும் காட்சிகள் வெளியாகி திகிலை ஏற்படுத்தின.
குறைந்தபட்சம், மேற்கத்திய நாடுகளை எச்சரிப்பதற்காகவாவது புடின் உக்ரைன் எல்லையில் வலிமை குறைந்த அணு ஆயுதம் ஒன்றை வெடிக்கச் செய்யலாம் என்ற கருத்தும் சமீபத்தில் வெளியானது.
அதற்கேற்றாற்போல், புடினுக்குச் சொந்தமான, அணுசக்தியால் இயங்கும் Belgorod என்னும் 604 அடி நீளமும், 30,000 டன் எடையும் கொண்ட நீர்மூழ்கி ஒன்று செல்லும் பாதையை, தாங்கள் தவறவிட்டுவிட்டதாக நேட்டோ எச்சரித்திருந்தது.
இந்நிலையில், ரஷ்யாவுக்குச் சொந்தமான, பிரம்மாண்ட torpedoக்களை சுமந்து செல்லக்கூடிய, Belgorod என்னும் அதே பிரம்மாண்ட நீர்மூழ்கிக்கப்பல் ஆர்டிக் சமுத்திரத்தின் ஒரு பகுதியாகிய, Barents கடலில் தற்போது இருப்பது சேட்டிலைட் புகைப்படங்கள் மூலம் தெரியவந்துள்ள விடயம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Belgorodதான் உலகிலேயே மிகப்பெரிய இயங்கும் நிலையிலுள்ள நீர்மூழ்கிக்கப்பல் என்பது குறிப்பிடத்தக்கது.