இதுவரை சாப்பிட்டதில் இந்திய பிரியாணியில் இது தான் ஃபெஸ்ட்! ஜப்பான் தூதர் புகழாரம்
இந்திய மாநிலம், உத்திர பிரதேசத்தில் உள்ள லக்னோ பிரியாணி தான் மிகச்சிறந்த பிரியாணி என்று ஜப்பான் தூதர் ஹிரோஷி சுசுகி புகைப்படத்தை பகிர்ந்து கூறியுள்ளார்.
லக்னோ பிரியாணி
சமீபத்தில், ஜப்பான் தூதர் ஹிரோஷி சுசுகி, மும்பையில் உள்ள மெட்ரோ ரயிலில் பயணம் செய்ததும், அங்குள்ள மார்க்கெட்டில் ஆடைகள் வாங்கியதும் தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின.
இந்நிலையில், ஹிரோஷி சுசுகி பிரியாணி சாப்பிடும் புகைப்படத்தை சமூக வலைத்தளமான ட்விட்டர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அதுமட்டுமல்லாமல், அவருடைய பதிவில் "நான் 2 நாட்களாக தொடர்ந்து லக்னோவில் பயணம் செய்து வருகிறேன். லக்னோ பிரியாணி இதுவரை நான் சாப்பிட்டதிலேயே மிகச்சிறந்த பிரியாணி " எனக் கூறியுள்ளார்.
Lucknowi Biryani for two days in a row !
— Hiroshi Suzuki, Ambassador of Japan (@HiroSuzukiAmbJP) November 4, 2023
Simply the best Biryani I’ve ever had !! ?? pic.twitter.com/5Qj5f8fGFw
அதோடு, லக்னோவில் பயணம் செய்துள்ள மற்ற புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார். இதனை, பல பயனர்கள் லைக் செய்து வருகின்றனர்.