வெடித்து சிதறிய டைட்டன் நீர்மூழ்கி கப்பல்: கடலுக்கு அடியில் இருந்து மனித உடல் உறுப்புகள் மீட்பு
டைட்டானிக் கப்பலை பார்வையிட சென்ற டைட்டன் நீர்மூழ்கி கப்பல் வெடித்து சிதறி 5 பேர் உயிரிழந்த நிலையில், கடலுக்கு அடியில் இருந்து மனித உடல் உறுப்புகள் கண்டெடுக்கப்பட்டு இருப்பதாக அமெரிக்க கடலோர காவல் படை தகவல் தெரிவித்துள்ளது.
கடலுக்குள் மூழ்கிய நீர்மூழ்கி கப்பல்
புகழ்பெற்ற டைட்டானிக் கப்பலை பார்வையிடுவதற்காக 5 பேருடன் கடலுக்குள் சென்ற டைட்டன் நீர்மூழ்கி கப்பல் வெடித்து சிதறி விபத்துக்குள்ளானது.
இதில் பிரித்தானிய பணக்காரர் ஹமிஷ் ஹார்டிங், பிரித்தானிய தொழிலதிபர் ஷாஜதா தாவூத் அவரது மகன் சுலோமான் தாவூத் மற்றும் அமெரிக்காவை சேர்ந்த ஓஷன்கேட்டின் தலைமை நிர்வாகி ஸ்டாக்டன் ரஷ் இவர்களுடன் பிரான்ஸ் நீர்மூழ்கிக் கப்பல் பைலட் பால்-ஹென்றி ஆகிய 5 பேரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
Reuters
இதையடுத்து வெடித்து சிதறிய டைட்டானிக் நீர்மூழ்கி கப்பலின் உடைந்த பாகங்களை கண்டறிய பல்வேறு சர்வதேச நாடுகளை சேர்ந்த ரோந்து கப்பல்கள், விமானம் மற்றும் நீர்மூழ்கி வாகனங்கள் உட்படுத்தப்பட்டு இருந்தன.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெடித்துச் சிதறிய டைட்டன் நீர்மூழ்கி கப்பலின் வால் கூம்பு பகுதி 1600 அடி ஆழத்தில் கடல் படுக்கையில் இருந்து கண்டெடுக்கப்பட்டு இருப்பதாக அமெரிக்க கடலோர காவல் படை தகவல் தெரிவித்து இருந்தது.
உடல் உறுப்புகள் மீட்பு
வெடித்து சிதறிய நீர்மூழ்கி கப்பலின் உடைந்த பாகங்களை கண்டுபிடிக்கும் நோக்கில் தேடுதல் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், மனித உடல் உறுப்புகள் என யூகிக்க கூடிய தடயங்கள் கண்டறியப்பட்டு இருப்பதாக அமெரிக்க கடலோர காவல் படை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக டைட்டன் நீர்மூழ்கி கப்பலை தேடும் குழுவின் தலைவர் ஜேசன் நியூபாவர் தெரிவித்த தகவலில், கடலடியில் இருந்து நெருங்கி விழுந்த நீர்மூழ்கி கப்பலின் உடைந்த பாகங்கள் மற்றும் மனித உடல் உறுப்புகள் என யூகிக்கப்படும் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளார்.
The Victor 6000(Sky News)
மேலும் தற்போது கண்டெடுக்கப்பட்டுள்ள உடைந்த பாகங்கள் மற்றும் மனித உடல் உறுப்புகள் என்று யூகிக்கப்படும் பொருட்கள் விபத்துக்கான காரணத்தை கண்டறிய பெரும் உதவியாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |