100 சதவீதம் இது நடக்கும் என்று எனக்கு தெரியும்! முன்னரே டைட்டன் நீர்மூழ்கி கப்பலில் பயணித்த நபர் பரபரப்பு
டைட்டானிக் சுற்றுலா நீர்மூழ்கி கப்பலில் இப்படியொரு அசம்பாவிதம் நிச்சயம் நடக்குமென்று தனக்கு தெரியும் என டைட்டன் நீர்மூழ்கியில் ஏற்கெனவே பயணித்த ஒருவர் கூறியுள்ளார்.
டைட்டன் நீர்மூழ்கி விபத்து
ஜூன் 18 (ஞாயிற்றுக்கிழமை) டைட்டானிக் கப்பல் விபத்துக்கு அருகில் சுற்றுலா நீர்மூழ்கி கப்பலான டைட்டன் ஆழ்கடல் அழுத்தித்தினால் நசுங்கி வெடித்துச் சிதறியது. இதில், அந்த நீர்மூழ்கி கப்பலில் பயணித்த 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்து உலகளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
OceanGate
பயங்கரமான இந்த சம்பவத்தை அடுத்து, ஏற்கெனெவே OceanGate Expeditions நிறுவனத்தின் ஆழ்கடல் பயணங்களை மேற்கொண்ட சிலர் தங்கள் அனுபவங்களை விவரித்தனர். அதில் சிலர், டைட்டன் நீர்மூழ்கி கப்பலில் தங்கள் பயணம் நன்றாக உணர்ந்ததாக கூறியுள்ளனர். கடலின் மேற்பரப்பிலிருந்து கிட்டத்தட்ட 13,000 அடி (3,962 மீட்டர்) கீழே தாங்கள் "நல்ல கைகளில்" இருப்பதாக உணர்ந்ததாகக் கூறினார்கள்.
100 சதவீதம் இது நடக்கும் என்று எனக்கு தெரியும்
ஆனால், இப்போது ஒருவர் "இது நடக்கும் என்று எனக்கு 100% தெரியும்," என்று கூறியுள்ளார். டிஸ்கவரி சேனலின் "Expedition Unknown" நிகழ்ச்சியின் கமெரா ஆபரேட்டரான பிரையன் வீட் (Brian Weed) என்பவர் தான் இதனை கூறியுள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை டைட்டன் நீர்மூழ்கி கப்பல் காணாமல் போனதாய் அறிந்ததிலிருந்து, தனது அடிவயிறு கலங்கியதாகவும் ஒரு வலியை உணர்ந்ததாக அவர் கூறினார்.
OceanGate
மோசமான அனுபவம்
தனது அனுபவத்தை பகிர்ந்துகொண்ட பிரையன் வீட் , மூழ்கிய டைட்டானிக் கப்பலை முதமுறையாக படம்பிடிப்பதற்காக, மே 2021-ல் வாஷிங்டன் மாநிலத்தின் புகெட் சவுண்டில் மேற்கொள்ளப்பட்ட டைட்டன் சோதனை பயணத்தில் கலந்துகொண்டேன், என்றார்.
புகழ்பெற்ற கப்பல் விபத்தை படமாக்க ஓஷன்கேட் எக்ஸ்பெடிஷன்ஸ்குழுவுடன் அந்த சிறிய நீர்மூழ்கி கப்பலுக்குள் பிரையன் வீட் மற்றும் அவரது சகாக்கள் தயாராகிக் கொண்டிருந்தனர்.
அவர்கள் விரைவில் சிக்கல்களை எதிர்கொண்டனர்: உந்துவிசை அமைப்பு வேலை செய்வதை நிறுத்தியது. கணினிகள் பதிலளிக்கத் தவறிவிட்டன. தொடர்புகள் நிறுத்தப்பட்டன. OceanGate தலைமை நிர்வாக அதிகாரியான ரஷ், கப்பலை அதன் தொடுதிரைகளில் மறுதொடக்கம் செய்து சரிசெய்ய முயற்சி செய்தார்.
PA
குழப்பமடைந்த அவரது முகத்தில் உண்மையில் மகிழ்ச்சி தெரியவில்லை, ஆனால் அவர் பிரச்சினை ஒன்றும் இல்லை என்பது போல் நடந்துகொண்டு சாக்கு சொல்ல முயன்றார்.
அப்போது அவர்கள் அமைதியான நீரில் 100 அடி (30 மீட்டர்) ஆழத்தில் இருந்தனர். அப்போது அதிலிருந்த எனக்கு எழுந்த ஒரு கேள்வி "இது எப்படி 12,500 அடிக்கு செல்லும் - இதற்கு மேலும் நாம் இந்த கப்பலில் பயணித்தே ஆகவேண்டுமா?" என்று கூறினார்.
இதையடுத்து பயணம் கைவிடப்பட்டதாக கூறிய பிரையன் வீட், அது தன வாழ்வில் மறக்கமுடியாத பீதியடையவைத்த சம்பவம் என தெரிவித்தார்.
Titanic Ship, Titan Submarine, OceanGate Expeditions, Brian Weed, camera operator, Discovery Channel, Titan submersible
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |