உலகை உலுக்கிய நீர்மூழ்கிக் கப்பல் விபத்து: முன்பே கணித்த கார்ட்டூன் தொடர்
டைட்டானிக் கப்பலை பார்வையிட ஆழ்கடலுக்குச் சென்ற டைட்டன் நீர்மூழ்கிக் கப்பல் விபத்து குறித்து பல வருடங்களுக்கு முன்பே ‘தி சிம்ப்ஸன்ஸ்’ என்ற கார்ட்டூன் தொடர் கணித்துள்ளதாக தற்போது சமூகவலைத்தளங்களில் வீடியோ வைரலாகி வருகிறது.
‘டைட்டன்’ நீர்மூழ்கிக் கப்பல் விபத்து
மிகப் பெரிய டைட்டானிக் கப்பல் கடந்த 1912ம் ஆண்டு கனடா அருகே அட்லாண்டிக் கடலின் நடுப்பகுதியில் இருந்த பனிப்பாறையில் மோதி 12,500 அடி ஆழத்தில் மூழ்கியது.
இக்கப்பலில் பயணம் செய்த பல்லாயிரக்கணக்கான மக்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இது வரலாற்றில் அழியாத பேர் விபத்தாக இன்று வரை மக்கள் மனதில் நீங்காமல் இடம் பிடித்துள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த ஓசன்கேட் என்ற நிறுவனம் ஆழ்கடலில் மூழ்கியுள்ள இந்த டைட்டானிக் கப்பலின் பாகங்களை பார்வையிடும் சாகச சுற்றுலாவை பல வருடங்களாக நடத்தி வருகிறது.
இந்த டைட்டானிக் கப்பலை பார்வையிட ‘டைட்டன்’ என்ற நீர்மூழ்கி கப்பல் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த நீர்மூழ்கி கப்பலில் 5 பேர்தான் பயணிக்க முடியும். இப்பயணத்திற்கு சுமார் ரூ.2 கோடி கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
இந்நிலையில், சில நாட்களுக்கு முன்னர் 5 கோடீஸ்வரர்கள் ‘டைட்டன்’ நீர்மூழ்கி கப்பலில் பயணம் செய்தனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை 1.45 மணிக்கு நீர்மூழ்கி கப்பலின் தகவல் இணைப்பு திடீரென்று துண்டானது.
இதனால் பதறிப்போன ஓசன்கேட் நிறுவனம் அந்த நீர்மூழ்கி கப்பலை தொடர்பு கொள்ள முயற்சி செய்தது. ஆனால், முடியவில்லை. 5 பேருடன் மாயமான அக்கப்பலில் பயணம் செய்த 5 பேரும் உயிரிழந்து விட்டதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
வைரலாகும் ‘தி சிம்ப்ஸன்ஸ்’ வீடியோ
இந்நிலையில், சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. இந்த விபத்து குறித்து பல ஆண்டுகளுக்கு முன்பே ‘தி சிம்ப்ஸன்ஸ்’ கார்ட்டூன் தொடரில் கணித்து காட்டப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
தற்போது வைரலாகும் இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் ‘டைட்டன்’ விபத்தையும், ‘சிம்ப்ஸன்ஸ்’ கார்ட்டூன் தொடருடன் ஒப்பிட்டு கமெண்ட் செய்து வருகின்றனர்.
இதோ அந்த வீடியோ -
The Simpsons really predicted the titanic submarine situation .. and that they would completely run out of oxygen (watch till the end) this is actually scary. pic.twitter.com/xOWtE6DTQq
— Qura (@Qurandale) June 22, 2023
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |