Mr Titanic... 5,000 பொக்கிஷங்கள்! டைட்டன் நீர்மூழ்கிக் கப்பலில் மரணமடைந்தவர் பற்றிய புதிய தகவல்
டைட்டன் நீர்மூழ்கிக் கப்பலில் மரணமடைந்த ஐவரில், பிரான்ஸ் நாட்டவர் ஒருவர் சுமார் 10 ஆண்டுகள் செலவிட்டு, இதுவரை மூழ்கிய டைட்டானிக் கப்பலில் இருந்து 5,000 கலைப்பொருட்களை மீட்க உதவியுள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.
கலைப்பொருட்களை மீட்டு ஆதாயம்
77 வயதான Paul-Henri Nargeolet என்பவரை உண்மையில், அவருக்கு நெருக்கமானவர்கள் அனைவரும் Mr Titanic என்றே அழைத்து வந்துள்ளனர். RMS Titanic Inc என்ற நிறுவனம் சார்பில் தான் Paul-Henri Nargeolet மூழ்கிய டைட்டானிக் கப்பலில் இருந்து கலைப்பொருட்களை மீட்டுள்ளார்.
@AFP
சுமார் 1,500 உயிர்களை காவுகொண்ட அந்த கப்பலில் இருந்து, கலைப்பொருட்களை மீட்டு ஆதாயம் பார்ப்பதாகவும் RMS Titanic Inc நிறுவனம் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.
ஆனால் Nargeolet தெரிவிக்கையில், தமது நோக்கம் முற்றிலுமாக கல்வி மற்றும் பாதுகாத்தல் தொடர்புடையது என்றார். டைட்டன் நீர்மூழ்கிக் கப்பலில் பயணப்படுவதற்கு முன்னர், மூழ்கிய டைட்டானிக் கப்பல் பகுதிக்கு டசின் முறை சென்று திரும்பியுள்ளார்.
RMS Titanic Inc நிறுவனம் கடந்த 1987, 1993, 1994, 1996, 1998, 2000 மற்றும் 2004ல் டைட்டானிக் கப்பலில் இருந்து கலைப்பொருட்களை மீட்டுள்ளது. இதில் பெருமளவு தங்க நகைகளை மீட்டுள்ளதாக கூறப்படுகிறது.
டைட்டானிக் கப்பலில் இருந்து கலைப்பொருட்கள் அனைத்தும் தொலைந்து போகும் முன்னர், அவை அனைத்தையும் மீட்க வேண்டும் என்பதே RMS Titanic Inc நிறுவனத்தின் இலக்கு என கூறுகின்றனர்.
5,000 கலைப்பொருட்களை மீட்டுள்ளனர்
மட்டுமின்றி, மீட்கப்பட்டுள்ள கலைப்பொருட்களை லாஸ் வேகஸில் காட்சிப்படுத்தவும் செய்கின்றனர். Nargeolet தலைமையிலான குழு இதுவரை 5,000 கலைப்பொருட்களை மீட்டுள்ளனர்.
NOAA
அத்துடன் டைட்டானிக் கப்பலில் இருந்து சுமார் 20 டன் எடை கொண்ட பகுதியையும் ஆராட்சிக்காக மீட்டு வந்துள்ளனர். Nargeolet பிரான்சில் பிறந்தாலும், ஆப்பிரிக்காவில் வளர்ந்துள்ளார்.
மேலும் 20 ஆண்டுகள் பிரான்ஸ் கடற்படையில் பணியாற்றியுள்ளார். அமெரிக்க பெண்மணியை திருமணம் செய்துகொண்டு, 2017ல் அவர் இறக்கும் வரையில் Connecticut பகுதியில் Nargeolet குடியிருந்துள்ளார்.
2016ல் டைட்டானிக் நிறுவனம் திவாலானதாக அறிவிக்க, அதன் பின்னர் மீட்கப்பட்ட கலைப்பொருட்களை அவர்கள் காட்சிப்படுத்துவதை நிறுத்தியுள்ளதாக தெரிவிக்கின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |