டைட்டன் நீர்மூழ்கி விபத்து குறித்த விசாரணையில் இறங்கும் பிரான்ஸ், கனடா நாடுகள்
டைட்டன் நீர்மூழ்கி கப்பல் விபத்து குறித்து விசாரணை நடந்த பிரான்ஸ், இங்கிலாந்து, கனடா உள்ளிட்ட நாடுகளின் வாரியங்கள் களத்தில் இறங்குகின்றன.
நீர்மூழ்கி விபத்து
சமீபத்தில் டைட்டானிக் கப்பலை காண டைட்டன் நீர்மூழ்கி கப்பலில் சென்ற ஐவர் பலியானது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக சர்வதேச அமைப்புகள் விசாரணையை தொடங்குகின்றன.
அமெரிக்க தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம், கனடா போக்குவரத்து வாரியம், பிரான்ஸ் கடல் விபத்து மரண விசாரணை வாரியம் மற்றும் இங்கிலாந்து கடல் விபத்து விசாரணைப் பிரிவு ஆகியவை இணைந்து இதனை தொடங்க உள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
தலைமை அதிகாரி
அமெரிக்க கடலோர காவல் படையின் தலைமை விசாரணை அதிகாரி ஜேசன் நியூபார் செய்தியாளர்களிடம் பேசியபோது, 'விபத்து நடந்த கடலடிப் பகுதியில் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. எதனால் நீர்மூழ்கியில் உள்வெடிப்பு ஏற்பட்டது என்று விசாரணை மேற்கொள்ளப்படும்' என்றார்.
எனினும் இந்த விசாரணை எப்போது முடிவடையும் என்ற விவரத்தை ஜேசன் தெரிவிக்கவில்லை. இதற்கிடையில் ஆழ்கடலில் 12,500 அடியில் கிடக்கும் நீர்மூழ்கியின் சிதைவுகள் குறித்து விசாரிப்பதற்கு அதிக சிரமும், நீண்ட காலமும் ஆகும் என்று விசாரணை வட்டாரங்கள் தெரிவித்தன.
முன்னதாக, ஆழ்கடல் பயணத்தை நீர்மூழ்கி கப்பல் தொடங்கி விபத்திற்குள்ளானதில் 5 பேர் பலியானதை அமெரிக்க கடலோர காவல்படை உறுதி செய்தது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |