TN Budget 2024 Live: 2030-க்குள் 8 லட்சம் கான்கிரீட் வீடுகள்.. தமிழக பட்ஜெட்டின் முக்கிய திட்டங்கள்
தமிழக அரசின் 2024 -25 ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தமிழக சட்டப்பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்து வருகிறார்.
TN Budget 2024 நேரலை
தமிழக சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் கடந்த 12 -ம் திகதி ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது.
இந்தநிலையில் சட்டசபையில் இன்று 2024-2025-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்து வருகிறார். அதற்கான லோகோவை "தடைகளைத் தாண்டி.. வளர்ச்சியை நோக்கி" என்ற தலைப்பில் தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ளது.
முக்கிய திட்டங்கள்
* சென்னையில் சாலைகளை விரிவுபடுத்த ரூ.300 கோடி, சென்னை கடற்கரை பகுதிகளை மேம்படுத்த ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* வடசென்னை பகுதியில் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்வதற்கு ரூ.1000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* ‘கலைஞரின் கனவு இல்லம்’ திட்டத்தின் கீழ் மாநிலம் முழுவதும் 2030 -க்குள் 8 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டித்தரப்படும்.
* கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க ரூ.946 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* சிங்காரச் சென்னை 2 திட்டத்திற்கு ரூ.500 கோடி, 5000 ஏரிகள், குளங்கள் புனரமைப்பு செய்ய ரூ. 500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* மதுரை மற்றும் சேலம் மாவட்டத்தில் 24 மணி நேரமும் தடையற்ற குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும்.
* கீழடியில் திறந்தவெளி அரங்கம் அமைக்க ரூ.17 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* சிலப்பதிகாரம், மணிமேகலையை 25 மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்ய ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கு ரூ.13,720 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* உயர் கல்வித்துறைக்கு ரூ.8,212 கோடி, பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.44,042 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |