2025-ல் Schengen Visa எளிதாக பெறுவது எப்படி? எந்த நாட்டில் நிராகரிப்பு விகிதம் குறைவு?
2025-ஆம் ஆண்டில் ஐரோப்பாவிற்கு சுற்றுலா செல்ல திட்டமிடுகிறீர்களா? அப்படியென்றால் எந்த ஐரோப்பிய நாட்டில் Schengen விசாவை எளிதாக பெறமுடியும் என்பதைத் தெரிந்துகொள்வது அவசியம்.
சில நாடுகளில் Schengen விசாவை பெறுவதற்கான செயல்முறை சிக்கலானதாக இருக்கலாம். ஆனால், சில நாடுகள் விசா வழங்குவதில் அதிக நன்மை வழங்குகின்றன.
ரோம், சுவிட்சர்லாந்து, கிரேக்கம் போன்ற இடங்களை சுற்றிப் பார்க்க விரும்பினால், சரியான நாட்டில் விண்ணப்பிக்க வேண்டும்.
2025-ல் எளிதாக கிடைக்கும் Schengen விசாக்கள்
Schengen விசா மூலம் 29 ஐரோப்பிய நாடுகளுக்குச் செல்லலாம். ஆனால், ஒவ்வொரு நாட்டின் நிராகரிப்பு விகிதம் மாறுபடுகிறது.
சமீபத்திய தரவுகளின்படி, இத்தாலி, ஜேர்மனி, ஆஸ்திரியா, ஐஸ்லாந்து, கிரேக்கம், சுவிட்சர்லாந்து, லாட்வியா, லக்ஸ்சம்பர்க், லிதுவேனியா, ஸ்லோவாகியா ஆகிய நாடுகள் எளிதில் விசா வழங்கும்.
இத்துடன் 2025 முதல் புல்கேரியா மற்றும் ருமேனியா ஆகியவை Schengen வலயத்தில் இணைக்கப்பட்டுள்ளதால், இவை புதிய எளிதான வாய்ப்புகளாக இருக்கலாம்.
Schengen விசா பெற எளிதான நாடுகள் மற்றும் அவற்றின் நிராகரிப்பு விகிதம்:
1. ஐஸ்லாந்து - இங்கு நிராகரிப்பு விகிதம் 2.2 சதவீதம் மட்டுமே. 2023-ல் 9.7% இருந்து 2.2% ஆக குறைந்துள்ளது.
2. சுவிட்சர்லாந்து - இங்கு நிராகரிப்பு விகிதம் 10.7 சதவீதமாகும். சூரிக், ஜெனீவா போன்ற நகரங்களுக்கு எளிதில் விசா கிடைக்கும்.
3. லாட்வியா - இங்கு நிராகரிப்பு விகிதம் 11.7 சதவீதமாகும். Riga நகரின் அழகைக் காண சுலபமாக விசா கிடைக்கும்.
4. இத்தாலி - இங்கு நிராகரிப்பு விகிதம் 12 சதவீதமாகும்: நியாயமான விசா செயல்முறை. நிராகரிப்பு விகிதங்களை நிர்வகிக்கும் போது இத்தாலி ஏராளமான விண்ணப்பங்களை செயலாக்குகிறது.
5. லக்ஸ்சம்பர்க் - இங்கு நிராகரிப்பு விகிதம் 12.7 சதவீதமாகும். சிறிய நாடு ஆனாலும் விசா பெறுவதில் சிக்கல் குறைவாகவே இருக்கும்.
6. லிதுவேனியா - லிதுவேனியாவின் நிராகரிப்பு விகிதம் 12.8 சதவீதமாகும் ஆகும். சரியான ஆவணங்கள் இருந்தால் விசா எளிதில் கிடைக்கும்.
7. ஸ்லோவாகியா - நிராகரிப்பு விகிதம் 12.9 சதவீதம். அழகிய மலைகள், கோட்டைகள் கொண்ட நாடு.
8. ஜேர்மனி - ஜேர்மனியின் நிராகரிப்பு விகிதம் 14.3 சதவீதம் ஆகும். பெரிய நாடாக இருந்தாலும் சரியான ஆவணங்களுடன் விண்ணப்பித்தால் வாய்ப்பு அதிகம்.
9. ஆஸ்திரியா - இங்கு நிராகரிப்பு விகிதம் 14.3 சதவீதம் ஆகும். சங்கீதம் மற்றும் அழகிய நகரங்களுக்குப் புகழ்பெற்ற நாடு.
10. கிரேக்கம் - 14.7 சதவீதம் நிராகரிப்பு: சாண்டோரினி, ஏதென்ஸ் போன்ற இடங்களை பார்வையிட முடியலாம்.
Schengen விசா பெறும் வாய்ப்பை அதிகரிப்பது எப்படி?
எளிதாக விசா வழங்கும் நாடுகளில் விண்ணப்பிக்கவும் (ஐஸ்லாந்து, சுவிட்சர்லாந்து முதலியவை).
தேவையான அனைத்து ஆவணங்களையும் தயார் செய்யவும். எதாவது ஓரு ஆவணம் குறைந்தால், விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.
நிதி ஆதாரத்தைக் காட்டவும். பயண செலவினங்களுக்குத் தேவையான நிதி உங்களிடம் இருக்கிறது என்பதை நிரூபிக்க வேண்டும்.
உங்கள் சொந்த நாட்டுடன் உறுதியான உறவை காட்டவும். வேலை, குடும்ப உறவுகள் போன்றவை முக்கியம்.
விண்ணப்பத்தை முன்னதாகவே செய்யவும். கடைசி நேரத்திற்கு தள்ளிப்போட வேண்டாம்.
இந்த வழிகாட்டுதல்களைப் பின்பற்றினால், 2025-ஆம் ஆண்டில் யூரோப்பிற்கு பயணிக்க Schengen விசா பெறுவது மிக எளிதாக இருக்கும்!
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Top Easiest Schengen visas in 2025, European Union, Europe trip, Schengen visa countries