உண்மையில் பிரித்தானியாவை ஆள்வது யார்? மோசமாக விமர்சித்த புடின் ஆதரவாளர்
புடின் ஆதரவாளர் ஒருவர், உண்மையில் பிரித்தானியாவை ஆள்வது யார் என கேலி பேசியுள்ளதுடன், பிரித்தானியாவின் இரண்டு நகரங்கள் மீது அணுகுண்டு வீசவேண்டும் என்றும் கூறியுள்ளார்.
பிரித்தானியாவை ஆள்வது யார்?
புடின் ஆதரவாளரும், தொலைக்காட்சி பிரபலமுமான விளாடிமிர் சோலோவ்யோவ் (Vladimir Solovyov) என்பவர், பிரித்தானிய நகரங்களான ஆக்ஸ்போர்டு மற்றும் கேம்பிரிட்ஜ் மீது அணுகுண்டு வீசவேண்டும் என்று கூறியுள்ளார்.
அங்குள்ள மேல்குடிமக்களையும் அவர்களுடைய பல்கலைக்கழகங்களையும் குண்டுவீசி அழிக்கவேண்டும் என்று கூறியுள்ளார் விளாடிமிர்.
பிரித்தானிய அரசிலும் ராஜ குடும்பத்திலுமுள்ள சில முட்டாள்கள் நாட்டை ஆளவில்லை என்று கூறியுள்ள விளாடிமிர், உண்மையில் ஒரு ரகசிய அமைப்பு பிரித்தானியாவை கட்டுப்படுத்துவதாகத் தெரிவித்துள்ளதுடன், உண்மையில் பிரித்தானியாவை ஆள்வது யார் என கேள்வியும் எழுப்பியுள்ளார்.
பிரதமர்கள் போல நடிக்கும் சில முட்டாள்கள் பிரித்தானியாவில் அதிகாரத்தைக் கையில் வைத்துள்ளார்கள், அவர்கள்தான் பிரித்தானியாவை கட்டுப்பாட்டில் வைத்துள்ளார்கள் என்றும் கேலி பேசியுள்ளார் அவர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |