இலங்கைக்கு சுற்றுலா சென்ற வெளிநாட்டுப்பெண்: உயிரைப் பறித்த செல்பி மோகம்
இலங்கைக்கு சுற்றுலா சென்ற ரஷ்ய சுற்றுலாப்பயணி ஒருவர், செல்பி மோகத்தால் பரிதாபமாக பலியானார்.
இலங்கைக்கு சுற்றுலா சென்ற வெளிநாட்டுப்பெண்
ரஷ்ய நாட்டவரான ஓல்கா பெர்மினோவா(Olga Perminova, 53) என்னும் பெண், இலங்கைக்குச் சுற்றுலா சென்றுள்ளார்.
இலங்கையின் பிரபலமான Podi Menike ரயிலில் பயணம் செய்துகொண்டிருந்த ஓல்கா, ரயிலிலிருந்து வெளியே தொங்கியபடி செல்பி எடுக்க முயன்றுள்ளார்.
அப்போது, எதிர்பாராதவிதமாக பாறை ஒன்றில் மோதிய ஓல்கா, ரயிலிருந்து கீழே விழுந்துள்ளார்.
படுகாயமடைந்த ஓல்காவுக்கு உடனடியாக அவசர சிகிச்சையளிக்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட ஓல்காவுக்கு மருத்துவர்கள் சிகிச்சையளித்தும், சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார்.
ரஷ்யாவிலிருந்து ஒரு குழுவினர் இலங்கைக்கு சுற்றுலா வந்திருந்த நிலையில், ஓல்காவின் மரணம் அவர்களிடையே அதிர்ச்சியையும் துயரத்தையும் உருவாக்கியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |