பிரித்தானியாவில் ரயில் விபத்து: 10 க்கும் மேற்பட்டோர் காயம்! 32 வயதுடைய நபர் கைது
பிரித்தானியாவின் ஹெர்ஃபர்ட்ஷையரில் நிகழ்ந்த ரயில் விபத்தில் 12 பேருக்கு காயமடைந்துள்ளனர்.
ரயில் விபத்து
ஹெர்ஃபர்ட்ஷையரில் ஒரு லெவல் கிராசிங்கில் விவசாய டிரெய்லர்(Agricultural Trailer) மீது ரயில் மோதியதில் வியாழக்கிழமை அன்று 12க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
லியோமின்ஸ்டருக்கு வடக்கே இந்தச் சம்பவம் நடந்ததாக அவசரகால சேவைகள் தெரிவித்தன.
பிரிட்டிஷ் போக்குவரத்து போலீசார் (BTP) காலை 10:40 மணியளவில் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டதாக உறுதிப்படுத்தினர்.
காயமடைந்தவர்களில் ஒரு ஆண் ஹெலிகாப்டர் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார், ஒரு பெண்ணும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
மேற்கு மிட்லாண்ட்ஸ் ஆம்புலன்ஸ் சேவை அறிக்கையின்படி, ரயிலில் பயணித்த மேலும் 15 பேருக்கு மருத்துவ குழுவினரால் சம்பவ இடத்திலேயே சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர் அவர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர்.
அதிர்ஷ்டவசமாக, டிராக்டர்-டிரெய்லரில் இருந்த யாருக்கும் மருத்துவ உதவி தேவைப்படவில்லை.
32 வயதுடைய நபர் கைது
ரயில்வே பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தியதாக சந்தேகத்தின் பேரில், ப்ரோம்யார்டைச் சேர்ந்த 32 வயது மதிக்கத்தக்க ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தீயணைப்பு வீரர்களும் வெஸ்ட் மெர்சியா காவல் துறையினரும் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |