ஒரு இன்ச் கூட தர முடியாது... ட்ரம்பின் மிரட்டலுக்கு தாலிபான் பதிலடி
விமான நிலையத்தை மீண்டும் ஒப்படைக்கவேண்டும் என மிரட்டல் விடுத்துள்ள ட்ரம்புக்கு தாலிபான் பதிலடி கொடுத்துள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப், ஆப்கானிஸ்தானில் உள்ள பாக்ராம் விமான நிலையத்தை மீண்டும் அமெரிக்கா கைப்பற்ற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
2021-ல் அமெரிக்க படைகள் விலகிய பின், இந்த விமான நிலையம் தாலிபான் கட்டுப்பாட்டில் உள்ளது.
அதை கட்டியவருக்கு திருப்பி கொடுக்காவிட்டால் மோசமான விளைவுகள் ஏற்படும் என ட்ரம்ப் தனது Truth Social தளத்தில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பாக்ராம் விமான நிலையம்,காபூலுக்கு வடக்கே அமைந்துள்ள ஆப்கானிஸ்தானின் மிகப்பெரிய விமான தளம் ஆகும்.
இது 20 ஆண்டுகளாக அமெரிக்க மற்றும் NATO படைகளின் முக்கிய நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்பட்டது.
2020-ல் ட்ரம்ப் தலைமையில் தாலிபான்களுடன் செய்யப்பட ஒப்பந்தத்தின் அடிப்படையில், 2021-ல் ஜோ பைடன் தலைமையில் அமெரிக்க படைகள் விலகினர்.
ஆனால், ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு அமைச்சின் தலைமை அதிகாரி பஸிஹுதீன் ஃபித்ரத், "ஆப்கானிஸ்தானின் நிலத்தில் ஒரு அங்குலம் கூட எந்த ஒரு ஒப்பந்தத்தின் மூலமும் வழங்க முடியாது. உங்களுக்குத் தேவையில்லை" என கூறி ட்ரும்பின் கோரிக்கையை நிராகரித்தார்.
ஆப்கானிஸ்தான் அரசு, "நாட்டின் சுதந்திரம் மற்றும் நிலையான ஒருமைப்பாடு மிக முக்கியமானவை" என அதிகாரபூர்வ அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்த விவகாரம், ஆப்கானிஸ்தான்-அமெரிக்க உறவுகளில் புதிய பதற்றத்தை உருவாக்கியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Taliban refuse Trump Demands bagram air base, US vs Afghanistan, Taliban USA, Trump bagram air base Demands